Published:Updated:

தென்காசி: கணவனுடன் ஏற்பட்ட தகராறு; இரு குழந்தைகளுடன் தற்கொலை செய்துக்கொண்ட இளம்பெண்!

வாசுதேவநல்லூர்

கணவன், மனைவி இடையே குடும்ப விவகாரங்கள் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்த நிலையில், கணவன் திட்டியதால் மனமுடைந்த மனைவி தன் இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார்.

தென்காசி: கணவனுடன் ஏற்பட்ட தகராறு; இரு குழந்தைகளுடன் தற்கொலை செய்துக்கொண்ட இளம்பெண்!

கணவன், மனைவி இடையே குடும்ப விவகாரங்கள் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்த நிலையில், கணவன் திட்டியதால் மனமுடைந்த மனைவி தன் இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார்.

Published:Updated:
வாசுதேவநல்லூர்

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே ஆத்துவழி என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்தவர், முருகன். டிராக்டர் ஓட்டுநராக வேலை பார்த்துவருகிறார். அவருடைய மனைவி மீனா. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். அவர்களுக்கு 6 வயதில் தியாமூமினாள், 2 வயதுள்ள முகிஷா மூமினா என்ற இரு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்த நிலையில், தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்திருக்கிறது.

குழந்தையுடன் தாய் மீனா
குழந்தையுடன் தாய் மீனா

தம்பதி அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர். அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி வந்திருக்கிறார்கள். வழக்கம்போலவே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இருவரும் நீண்ட நேரம் சண்டையிட்டிருக்கிறார்கள். அதன் பின்னர் கணவன் முருகன் வீட்டிலிருந்து வெளியே சென்றிருக்கிறார்.

வீட்டுக்குத் திரும்பிய முருகன், தன் குழந்தைகள் இருவரும் சாப்பிடாமல் இருப்பதைப் பார்த்து மனைவி மீனா மீது கோபமடைந்திருக்கிறார். `நமக்குள் நடந்த சண்டைக்காக குழந்தைகளுக்கு ஏன் சாப்பாடு கொடுக்கவில்லை?’ எனக் கேட்டு மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இருவரும் மீண்டும் சிறிது நேரம் ஆளாளுக்கு ஏதேதோ பேசி சண்டையிட்டிருக்கிறார்கள்.

தகராறு காரணமாக கிணற்றில் வீசப்பட்ட குழந்தை
தகராறு காரணமாக கிணற்றில் வீசப்பட்ட குழந்தை

அதன் பின்னர் முருகன் வீட்டிலிருந்து வெளியே போய்விட்டு நீண்ட நேரம் கழித்து வந்திருக்கிறார். அப்போது வீட்டில் குழந்தைகளையும், மனைவி மீனாவையும் காணாமல் சுற்றுப்புறங்களில் தேடியிருக்கிறார். ஆனால் மூவரையும் காணாமல் அதிர்ச்சியடைந்த அவர் அருகில் வசிப்பவர்கள் உதவியுடன் தேடியிருக்கிறார்.

வீட்டின் அருகிலுள்ள கிணற்றில் தியாமூமினாள் உடல் மிதப்பதைப் பக்கத்து வீட்டினர் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். உடனடியாக வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தீயணைப்பு வீரர்கள் வந்து அந்தக் கிணற்றுக்குள் தேடியிருக்கிறார்கள்.

புளியங்குடி அரசு மருத்துவமனை
புளியங்குடி அரசு மருத்துவமனை

கிணற்றின் உள்ளே மீனா, மூத்த மகள் முகிஷா மூமினா ஆகியோரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. மூவரின் உடல்களையும் மீட்ட தீயணைப்புத்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக உடல்களை புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். குடும்பத் தகராறு காரணமாக தாயே இரு குழந்தைகளையும் கிணற்றுக்குள் மூழ்கடித்து, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.