Election bannerElection banner
Published:Updated:

நீலகிரி: துக்க தேவதைகளின் பளிங்குச் சிலைகள் மாயம்!-அதிர்ச்சியில் வரலாற்று ஆய்வாளர்கள்

 துக்க தேவதை சிலை
துக்க தேவதை சிலை

நூற்றாண்டு பழைமை வாய்ந்த அழகிய தோற்றம்கொண்ட `டைகர் ஹில்' கல்லறையில் துக்க தேவதைகளின் (Mourning Angeles) பளிங்குச் சிலைகள் மாயமாகியிருக்கின்றன.

ஆங்கிலேயர்களால் நிர்மாணிக்கப்பட்ட நீலகிரியில், வரலாற்றின் சான்றாக நூற்றாண்டுகளைக் கடந்த ஆட்சி அலுவலகங்கள், கட்டடங்கள், பூங்காக்கள், தேவாலயங்கள் என இன்றளவும் நிலைத்து நிற்கின்றன.

டைகர் ஹில்
டைகர் ஹில்

நூற்றாண்டு பழைமைவாய்ந்த கல்லறைகளில் ஒன்றாக குன்னூரிலுள்ள `டைகர் ஹில்' கல்லறையும் இருக்கிறது. இந்தக் கல்லறை 1905-ம் ஆண்டு அங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க தென்னிந்தியாவை முதன்முதலில் புகைப்படங்களில் ஆவணப்படுத்திய ஏ.டி.டபிள்யூ பென் (A.T.W.Penn) என்பவரின் கல்லறை இங்குதான் இருக்கிறது.

மேலும், `கூட்டுறவின் தந்தை’ என அழைக்கப்படும் சர்.ஜான். நிக்கல்சனின் கல்லறையும் இங்குதான் அமைந்திருக்கிறது.

துக்க தேவதை சிலை
துக்க தேவதை சிலை

கலைநயமிக்க சிறந்த கலைஞர்கலைக்கொண்டு இந்தக் கல்லறை உருவாக்கப்பட்டது. இந்தக் கல்லறையின் மத்தியில் (Mourning Angeles) எனப்படும் துக்க தேவதைகளின் மூன்று பளிங்குச் சிலைகள் நிறுவப்பட்டன. பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கிருந்த இரண்டு சிலைகள் மாயமாகின. மீதமிருந்த ஒரு சிலையும் தற்போது மாயமாகியிருக்கிறது.

நீலகிரி: பெற்ற மகளிடம் அத்துமீறிய தந்தை - 3 ஆண்டுகளாக கொடுமையை அனுபவித்த சிறுமி

இது குறித்து நம்மிடம் பேசிய வரலாற்று ஆர்வலர் ஹரிஹரன், ``கம்பீரமும் அழகும் நிறைந்த இந்தக் கல்லறைத் தோட்டம் வரலாற்றின் சான்றாக இருக்கிறது. பல ஆண்டுகளாக எந்தவிதப் பராமரிப்பும் இன்றியே காணப்படுகிறது. மரணத்தின் வலியையும் சோகத்தையும் த்தரூபமாகக் கடத்தும் வகையில் இந்த துக்க தேவதைகளின் முகங்கள் பளிங்குக் கற்களால் வடிவைக்கப்பட்டிருந்தன.

துக்க தேவதை
துக்க தேவதை

ஒவ்வொன்றும் கனத்த எடையுள்ளவை. இவை மூன்றுமே தற்போது மாயமாகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இவற்றை மீட்க மாவட்ட நிர்வாகமாவது முன்வர வேண்டும்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு