Published:Updated:

``எங்க அம்மாவ துள்ளத் துடிக்க எரிச்சு கொன்னுட்டாங்களே!" - கதறிய‌ மகள்கள்; சோகத்தில் மூழ்கிய கிராமம்

மகள்கள் ஷாலினி, சத்யா

``சந்திரா, மகள்களுக்கு கஷ்டத்தைக் காட்டக் கூடாதுனு ஓயாம ஓடி உழைச்சு வந்தா. இனி அவ மகள்களுக்கு யார் இருக்கா? எந்தப் பிள்ளைகளால தங்களோட அம்மாவுக்கு இப்படி ஒரு கொடூரமான இறப்புனா தாங்கிக்க முடியும்? யாராலயும் இவங்களுக்கு ஆறுதல் சொல்ல முடியல.''

``எங்க அம்மாவ துள்ளத் துடிக்க எரிச்சு கொன்னுட்டாங்களே!" - கதறிய‌ மகள்கள்; சோகத்தில் மூழ்கிய கிராமம்

``சந்திரா, மகள்களுக்கு கஷ்டத்தைக் காட்டக் கூடாதுனு ஓயாம ஓடி உழைச்சு வந்தா. இனி அவ மகள்களுக்கு யார் இருக்கா? எந்தப் பிள்ளைகளால தங்களோட அம்மாவுக்கு இப்படி ஒரு கொடூரமான இறப்புனா தாங்கிக்க முடியும்? யாராலயும் இவங்களுக்கு ஆறுதல் சொல்ல முடியல.''

Published:Updated:
மகள்கள் ஷாலினி, சத்யா

ராமேஸ்வரத்தில் கடல் பாசி சேகரிக்க சென்ற மீனவப் பெண் சந்திரா எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு இறால் பண்ணையில் பணியாற்றும் வடமாநில வாலிபர்கள் ஆறு பேர் அவரைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதன்படி வடமாநில வாலிபர்கள் ஆறு பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சந்திராவின் வீட்டின் முன்பு கதறி அழுத பெண்கள்
சந்திராவின் வீட்டின் முன்பு கதறி அழுத பெண்கள்

இந்நிலையில், இறந்த சந்திராவின் கடைசி மகள் ஷாலினியிடம் பேசினோம். ``எங்கம்மா நேத்து காலையில, `நான் கடலுக்கு பாசி எடுக்கப் போறேன், நீ பத்திரமா இரு'ன்னு சொல்லிட்டுப் போச்சு. ஆனா, திரும்பி இந்த நிலைமையில எங்க அம்மாவை பார்ப்பேன்னு நினைச்சு பார்க்கவே இல்லை. எனக்கு கல்யாணம் பண்ணி பார்க்கணும்னு எங்க அம்மாவுக்கு ரொம்ப ஆசை. ஆனா, அதுக்குள்ள எங்க அம்மாவை இப்படி அநியாயமா துள்ளத் துடிக்க எரிச்சு கொன்னுட்டாங்களே பாவிங்க. எங்கம்மாவ கொன்னவுனுங்களுக்கு தூக்குத்தண்டனை கொடுக்கணும். என்னை அநாதையா விட்டுட்டுப் போய்ட்டியேம்மா'' எனக் கதறி அழுத அவரை அருகிலிருந்தவர்கள் ஆசுவாசப்படுத்தினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இரண்டாவது மகள் சத்யா, ``எங்க அம்மா ரொம்ப தைரியமானவங்க. கடல்பாசி சேகரித்து ரொம்ப கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தாங்க. எங்க தங்கச்சியை நல்ல இடத்துல கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க. இவனுங்க வக்கிர புத்திக்கு எங்க அம்மாவை பலிகொடுத்துட்டானுகளே. என்னவெல்லாம் கொடுமை அனுபவிச்சதோ, எங்க அம்மா துடியாய் துடிச்சுருக்குமே'' எனத் தலையில் அடித்துக்கொண்டு அழுதார். இவர்களின் கதறல் கிராம மக்களை கண்ணீரில் மூழ்கடித்தது.

கூட்டு பாலியல் வன்முறை
கூட்டு பாலியல் வன்முறை
விகடன்

``சந்திரா, மகள்களுக்கு கஷ்டத்தைக் காட்டக்கூடாதுனு ஓயாம ஓடி உழைச்சு வந்தா. இனி அவ மகள்களுக்கு யார் இருக்கா? எந்தப் பிள்ளைகளால தங்களோட அம்மாவுக்கு இப்படி ஒரு கொடூரமான இறப்புனா தாங்கிக்க முடியும்? யாராலயும் இவங்களுக்கு ஆறுதல் சொல்ல முடியல. இந்த அளவுக்குக் கொடூரமாக கொலை செஞ்ச வடமாநிலத்தைச் சேர்ந்த அந்த ஆயோக்கிய பசங்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கணும்'' என அப்பகுதி மீனவப் பெண்கள் ஆவேசமாகக் கூறினர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism