Published:Updated:

`தேனிக்கு அழைத்துவரப்படும் இர்ஃபான்!' - மீண்டும் சூடுபிடிக்கும் நீட் விவகாரம்

இர்ஃபானிடம் விசாரணை மேற்கொள்ளும்போது நீட் ஏஜென்ட் ரஷித் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெறும் என்கிறது சி.பி.சி.ஐ.டி வட்டாரம்!

Theni CBCID
Theni CBCID

கடந்த ஒரு வாரமாக நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கு சற்று மந்தமாகச் சென்றுகொண்டிருந்த நிலையில், மீண்டும் இந்த வழக்கு சூடுபிடிக்கவிருக்கிறது.

`தேனிக்கு அழைத்துவரப்படும் இர்ஃபான்!' - மீண்டும் சூடுபிடிக்கும் நீட் விவகாரம்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்ற இர்ஃபான் என்ற மாணவர் சேலம் கோர்ட்டில் சரணடைந்தார். அவரின் தந்தை முகமது சஃபி, தேனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சரணடைந்த இர்ஃபானை, விசாரணைக்கு அழைத்துவர தேனி சி.பி.சி.ஐ.டி முடிவு செய்துள்ளது.

`நீட் ஏஜென்ட் ரஷீதைத் தேடும் சி.பி.சி.ஐ.டி!’ - ஆள்மாறாட்டம் வழக்கில் மேலும் ஒருவர் கைது

இது தொடர்பாக, தேனி குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. மேலும், உதித்சூர்யாவின் தந்தை வெங்கடேசன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவும் இர்ஃபானின் தந்தை முகமது சஃபி தாக்கல் செய்த ஜாமீன் மனுவும் விசாரணைக்கு வருகிறது.

`தேனிக்கு அழைத்துவரப்படும் இர்ஃபான்!' - மீண்டும் சூடுபிடிக்கும் நீட் விவகாரம்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய சி.பி.சி.ஐ.டி அதிகாரி ஒருவர், ``சேலத்தில் சரணடைந்த இர்ஃபானை விசாரணைக்கு அழைத்துவர முடிவு செய்திருக்கிறோம். அனுமதி கிடைத்தவுடன், சேலம் சென்று இர்ஃபானை அழைத்துவருவோம். ஐந்து நாள்கள் விசாரணை செய்ய அனுமதி கேட்டிருக்கிறோம்” என்றார். இர்ஃபானிடம் விசாரணை மேற்கொள்ளும்போது நீட் ஏஜென்ட் ரஷித் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெறும் என்கின்றது சி.பி.சி.ஐ.டி வட்டாரம்!