Published:Updated:

`நீதி கிடைக்கவில்லை; ஊர்மக்கள் கேலி!’ - ம.பி-யில் விபரீத முடிவெடுத்த பாலியல் கொடுமைக்குள்ளான பெண்

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை ( Representational Image )

மத்தியப்பிரதேசத்தின் நரசிங்பூர் மாவட்டம் ரிச்சை கிராமத்தில் வசித்துவந்த 32 வயது பெண் கடந்த திங்கள்கிழமை அந்தப் பகுதியை சேர்ந்த மூன்று பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்.

சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான வன்முறைச் செயல்கள் வட இந்தியாவில் அதிகரித்திருக்கின்றன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைக்குக்கு ஆளான பெண் கடுமையாகத் தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு நீதி கேட்டு நாடே கொந்தளித்திருக்கிறது. இது போன்ற சில சம்பவங்கள் மட்டுமே ஊடகங்கள் வாயிலாக வெளிச்சத்துக்கு வருகின்றன. பெண்களுக்கு எதிரான பல்வேறு கொடுமைகள் வெளியே தெரிவதில்லை. பெண்கள், தங்கள் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து. எனினும், இந்திய சமூக கட்டமைப்பு பெண்களின் குரல்வளையை இறுக்கமாக நெரிக்கவே, தனக்கு நடந்த அநீதியை காவல்துறையினர் கண்டுகொள்ளாததால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மற்றுமொரு தலித் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் நடந்திருக்கிறது.

மத்தியப்பிரதேசத்தின் நரசிங்பூர் மாவட்டம், ரிச்சை கிராமத்தில் வசித்துவந்த 32 வயது பெண் கடந்த திங்கள்கிழமை அந்தப் பகுதியைச் சேர்ந்த மூன்று பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். செப்டெம்பர் 22-ம் தேதி திங்கள்கிழமை காலை கால்நடைகளுக்கு புல் அறுப்பதற்காக மருமகள்களுடன் சென்ற அந்தப் பெண்ணை பரசு, அரவிந்த் சௌத்ரி, அனில் ராய் ஆகியோர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். இது குறித்த காவல்துறையினர் விசாரணையில், மருமகள்கள் இருவரும் ஆண்கள் அத்தையைக் கிண்டல் செய்ததைப் பார்த்ததாகவும், பாலியல் வன்முறையில் ஈடுபட்டதைத் தங்கள் பார்க்கவில்லை எனவும் கூறியிருக்கிறார்கள்.

தற்கொலை
தற்கொலை
Representational Image

சம்பவம் நடைபெற்ற அன்று மாலை பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரின் கணவரும் கோட்டிடோரியா காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள். காவல்நிலையத்தில் இருந்த துணை ஆய்வாளர் மிஷ்ரிலால் கோடப்பா வழக்கு பதிவு செய்யாமல் இருவரையும் அனுப்பியிருக்கிறார். மறுநாள் காவல்துறையிலிருந்து உடலியல் சோதனை செய்வதாகவும் கூறியிருக்கிறார்கள். எனினும், அதற்குப் பிறகு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், எஸ்.ஐ கோடப்பா பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமையன்று கைதுசெய்யப்பட்டார். பின் ஜாமீன் பெற்று வெளியே வந்திருக்கிறார்.

ஹத்ராஸ் இளம்பெண் குடும்பத்தினர் கோரிக்கை என்ன? - 5 விஷயங்களைப் பட்டியலிட்ட பிரியங்கா காந்தி

மூன்று நாள்களாக காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மனவேதனையடைந்த பாதிக்கப்பட்ட பெண் வெள்ளிக்கிழைமை காலை தண்ணீர் எடுப்பதற்காகக் குழாயடிக்குச் சென்ரிருக்கிறார். குழாயில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தபோது, லீலா பாய் என்னும் பெண் அவர் மனம் புண்படும்வகையில், அவரைத் தற்கொலைக்குத் தூண்டும் வண்ணம் பேசியிருக்கிறார். இதனால், மேலும் மனம் நொந்த அவர் வீட்டுக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

இது குறித்துப் பேசிய கடர்வரா துணை மண்டல காவல் அதிகாரி எஸ்.ஆர்.யாதவ், ``இந்த விவகாரம் தொடர்பாக உதவி ஆய்வாளர் மிஷ்ரிலால் கோடப்பா பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அரவிந்த், பரசு சௌத்ரி, அனில் ராய் ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்திருக்கிறோம்’’ என்று கூறியிருக்கிறார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
representational image

மேலும், ``அரவிந்த் சௌத்ரி கைதுசெய்யப்பட்டிருக்கிறார். மற்ற இருவரையும் தேடிவருகிறோம். லீலா பாயைக் கைது செய்திருக்கிறோம். தவிர, அரவிந்தின் தந்தை மோதிலாலும் ஐ.பி.சி பிரிவு 306-ன் (தற்கொலைக்கு தூண்டுதல்) கீழ் கைது செய்யப்பட்டார்" என்றும் யாதவ் குறிப்பிட்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு