Published:Updated:

சென்னை: 31 வழக்குகள்; 11 வாகனங்கள்! - திருட்டு வழக்கில் கைதான பிடெக் பட்டதாரி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்

சென்னையில் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் லோடு வாகனங்களைத் திருடி, குறைந்த விலைக்கு விற்றுவந்த பிடெக் பட்டதாரி அகஸ்டின் என்பவரை போலீஸார் கைதுசெய்தனர்.

சென்னை அரும்பாக்கம், கண்ணப்பன் நகர், ராஜீவ் காந்தி தெருவைச் சேர்ந்தவர் நவீன்ராஜ். இவர் கடந்த 11.8.2021-ம் தேதி அரும்பாக்கம் சக்திநகர் மெயின்ரோட்டில் தன்னுடைய நான்கு சக்கர லோடு வாகனத்தை நிறுத்திவைத்திருந்தார். பின்னர் 12-ம் தேதி வந்து பார்த்தபோது வாகனத்தைக் காணவில்லை. அதனால் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் நவீன்ராஜ் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அகஸ்டின்
அகஸ்டின்

அப்போது, சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லோடு வாகனத்தின் லாக்கை உடைத்து, அதை ஒருவர் எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. சிசிடிவி-யில் பதிவான உருவத்தை போலீஸார் பழைய குற்றவாளிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தனர். அப்போது அவர், பிரபல கார் திருடன் அகஸ்டின் எனத் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அகஸ்டினைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் தொடர்ந்து வாகனங்களைத் திருடியது தெரியவந்தது.

கன்னியாகுமரி மாவட்டம், முளகுமூடு போஸ்ட் பகுதியைச் சேர்ந்த அகஸ்டின் ஈடன் இன்பராஜ், மதுரை மாவட்டம் கருப்பாயூரணி போஸ்ட் பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டியன் இருவரும் வாகனத்தைத் திருடி விற்றது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைதுசெய்து ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஒன்பது லோடு வாகனங்களையும், இரண்டு கார்களையும் பறிமுதல் செய்தனர்.

மணல் திருட்டு வழக்கில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டரின் கணவர் கைது!
தங்கபாண்டியன்
தங்கபாண்டியன்

விசாரணையில் அகஸ்டின் ஈடன் இன்பராஜ், சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் லோடு வாகனங்களைத் திருடி தங்கபாண்டியன் மூலம் குறைந்த விலைக்கு விற்றுவருவது தெரியவந்தது. கைதான அகஸ்டின் ஈடன் இன்பராஜ் மீது 31 வழக்குகளும், தங்க பாண்டியன் மீது 12 வழக்குகளும் உள்ளன. இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``கைதுசெய்யப்பட்ட அகஸ்டின் என்பவர், எம்டெக் படித்துவிட்டு லோடு வாகனங்களைத் தொடர்ந்து திருடிவருகிறார். எப்படிப்பட்ட வாகனங்களென்றாலும் எளிதாக அதன் லாக்கை அகஸ்டின் உடைத்துவிடுவார். அதனால்தான் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் லோடு வாகனங்களைத் திருடி, குறைந்த விலைக்கு விற்றுவந்திருக்கிறார்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு