Published:Updated:

பணம் கேட்டு மிரட்டிய போலி போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள்; தற்கொலை செய்துகொண்ட நடிகை!

நடிகை தற்கொலை
News
நடிகை தற்கொலை

வீட்டுக்குத் திரும்பிய அந்த நடிகை அவ்வளவு பெரிய தொகையை எப்படி ஏற்பாடு செய்வது என்று தெரியாமல் மனரீதியாக பாதிக்கப்பட்டார். இதைப்பற்றி யாரிடமும் எதுவும் தெரிவிக்காத அவர், திடீரென தற்கொலை செய்துகொண்டார்.

மும்பையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கானை போதைப்பொருள் பயன்படுத்தியாக கைது செய்ததிலிருந்து, பாலிவுட்டில் `போதைப்பொருள் தடுப்பு பிரிவு' என்றாலே ஒரு வித அச்சம் நிலவுகிறது. இதனை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பாலிவுட் நடிகர், நடிகைகளை மிரட்டி பணம் பறிக்க தொடங்கியிருக்கின்றனர்.

மும்பை ஜோகேஷ்வரி மேற்கு பகுதியில் வசிக்கும் 28 வயது நடிகை ஒருவர், கடந்த 3 நாள்களுக்கு முன்பு லாட்ஜ் ஒன்றில் நடந்த பார்ட்டிக்கு தன் நண்பர்கள் மூன்று பேருடன் சென்றார். பார்ட்டியில் நடிகையையும், அவர் நண்பர்களையும் மடக்கி பிடித்த இரண்டு பேர் தாங்கள் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் என்று கூறியிருக்கின்றனர். மேலும், நீங்கள் போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பதால் உங்களை கைது செய்யப்போகிறோம் என்றும் தெரிவித்திருக்கின்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த நடிகையும், மற்றவர்களும் பேசித்தீர்த்துக்கொள்ளலாம் என்று அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது, அதிகாரிகள் என்று கூறிக்கொண்டவர்கள் ரூ.40 லட்சம் கொடுத்தால் விட்டுவிடுவதாக கூறியிருக்கின்றனர். பின்னர் பேரம் பேசப்பட்டு, அந்த தொகை ரூ.20 லட்சமாக குறைக்கப்பட்டது.

நடிகை தற்கொலை
நடிகை தற்கொலை

அதைத் தொடர்ந்து, வீட்டுக்குத் திரும்பிய அந்த நடிகை அவ்வளவு பெரிய தொகையை எப்படி ஏற்பாடு செய்வது என்று தெரியாமல் மனரீதியாக பாதிக்கப்பட்டார். இதைப்பற்றி யாரிடமும் எதுவும் தெரிவிக்காத அவர், திடீரென தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக அவருடன் பார்ட்டிக்கு சென்றிருந்த நபர் ஒருவர், இது குறித்து வாய்மொழியாக போலீஸாரிடம் தெரிவித்தார். அதையடுத்து, போலீஸார் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில் நடிகையுடன் பார்ட்டிக்குச் சென்ற ஆசிர் காஜி என்பவர் தன் நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் என்று தங்களை கூறிக்கொண்டு மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கைது
கைது

அதையடுத்து, மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்ட காஜியின் நண்பர்கள் சூரஜ் பர்தேஷ், பிரவின் ஆகிய இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர். காஜி தலைமறைவாகிவிட்டார். அவரைத் தேடி வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட நடிகை வட இந்திய போஜ்புரி திரைப்படங்களில் அதிகமாக நடித்து வந்தார் என்று போலீஸார் தெரிவித்தனர்.