Published:Updated:

`சூட்கேஸில் உடல் பாகங்கள்; ஸ்வெட்டரை வைத்து அடையாளம்'- தந்தையைக் கொலை செய்த வளர்ப்பு மகள்!

கொலை
கொலை

மும்பையில் தந்தையைக் கொலை செய்த வளர்ப்பு மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை மாகிம் கடற்கரையில் டிசம்பர் 4-ம் தேதி மாலை பெரிய சூட்கேஸ் ஒன்று மிதந்துகொண்டு இருந்தது. சூட்கேஸ் மூடப்பட்டிருந்த நிலையில் கால் ஒன்று வெளியில் நீட்டிக்கொண்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் சூட்கேஸைக் கைப்பற்றி அதைத் திறந்து பார்த்தபோது ஆண் சடலம் ஒன்று துண்டு துண்டாக வெட்டிய நிலையில் இருந்தது. முழுஉடல் இல்லை துண்டுதுண்டாகப் பாகங்கள் மட்டுமே இருந்தன. தலை கைகள் போன்ற பாகங்கள் காணவில்லை. இதையடுத்து பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அடையாளம் தெரியாத உடலை வைத்து போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.

கடற்கரையில் ஒதுங்கிய சூட்கேஸ்
கடற்கரையில் ஒதுங்கிய சூட்கேஸ்

இந்த வழக்கில் சடலத்தின் மீது இருந்த ஸ்வெட்டரை வைத்து கொலை செய்யப்பட்ட நபரை அடையாளம் கண்டுள்ளனர் மும்பை போலீஸார். கிட்டாரிஸ்டானா பெனட் ரிப்பலோ (வயது 59) என்பது தெரியவந்தது. அவரின் வளர்ப்பு மகளே அவரைக் கொலை செய்து உடலை சூட்கேஸில் வைத்து கடலில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரின் வளர்ப்பு மகள் ஆரத்யா கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய மும்பை போலீஸார். ``ஆரத்யாவுக்கு 19 வயதாகிறது. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவனுக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. இதை ரிப்பலோ கண்டித்துள்ளார். மேலும், ரிப்பலோ தன் வளர்ப்பு மகளான ஆரத்யாவிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதன்காரணமாகத் தன் தந்தையைக் கொலை செய்ய முடிவு செய்துள்ளார். சம்பவத்தன்று ஆரத்யா ரிப்பலோவைக் கம்பால் கடுமையாகத் தாக்கியுள்ளார். பின்னர், கொசுவர்த்தியைக் கொண்டு முகத்தில் அடித்துள்ளார். அதன் பின்னர், சிறுவனின் உதவியுடன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.

`சூட்கேஸில் உடல் பாகங்கள்; ஸ்வெட்டரை வைத்து அடையாளம்'- தந்தையைக் கொலை செய்த வளர்ப்பு மகள்!

இதையடுத்து உடலைத் துண்டுத்துண்டாக வெட்டியுள்ளனர். கத்தியை நன்கு சூடுபடுத்தி இதைச் செய்துள்ளனர். உடலை மூன்று சூட்கேஸில் அடைத்து ஆட்டோவில் ஏற்றிச் சென்றுள்ளனர். பின்னர் மாகிம் கடற்கரைப் பகுதியில் பல்வேறு இடங்களில் வீசியுள்ளனர். அதன் பின்னர் மூன்று நாள்கள் இருவரும் அந்த வீட்டில்தான் தங்கியுள்ளனர். சூட்கேஸில் இருந்த ஸ்வெட்டரை வைத்துதான் இந்த வழக்கில் ரிப்பலோவை அடையாளம் கண்டோம். முகநூலில் அவர் பதிவிட்டதில் இதே ஸ்வெட்டரை அணிந்திருந்தார். இதுதான் இந்த வழக்குக்கு உதவியாக இருந்தது” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு