Published:Updated:

"இப்படிச் செய்தால் என்னுடைய பெயர் பிரபலமாகும்!" - அம்பானி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்

அம்பானி பள்ளி

தனது பெயர் பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக, மும்பையில் அம்பானி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் தேடிவருகின்றனர்.

மும்பை பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் பள்ளி அமைந்திருக்கிறது. இந்தப் பள்ளியில் வி.ஐ.பி-க்களின் குழந்தைகள் அதிக அளவில் படித்துவருகின்றனர். இந்த நிலையில், திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் பள்ளிக்கு மர்ம நபர் ஒருவர் லேண்ட்லைன் நம்பரில் போன்செய்து பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறிவிட்டு, இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

"இப்படிச் செய்தால் என்னுடைய பெயர் பிரபலமாகும்!" - அம்பானி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்

இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் வந்து பள்ளி முழுக்கச் சோதனை செய்து பார்த்தனர். ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. ஏற்கெனவே வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அதே நபர் மீண்டும் பள்ளியின் வாட்ச்மேன் அறைக்கு போன்செய்து, `நான்தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தேன்' என்று சொல்லியிருக்கிறார்.

போனில் வெடிகுண்டு மிரட்டல்
போனில் வெடிகுண்டு மிரட்டல்

அதோடு தன்னுடைய பெயர் விக்ரம் சிங் என்றும், குஜராத்திலிருந்து பேசுவதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் தனது ஆதார் கார்டு எண், பான் கார்டு எண்ணைக் கொடுத்து, ``நான்தான் என்பதைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள். வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் எனது பெயர் மீடியாவில் பெரிய அளவில் அடிபடும். போலீஸார் என்னைக் கைதுசெய்வார்கள். இதன் மூலம் எனது பெயர் பிரபலம் அடையும் என்பதற்காக இந்த வெடிகுண்டு மிரட்டலை விடுக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

விக்ரம் சிங் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து அவரைக் கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர்.