அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

கணவர் கொலை... மாமியாருக்கு ட்ரையல்... - ஸ்லோ பாய்சன் கொடுத்த மனைவி!

கமல்காந்த் ஷா, சரளா
பிரீமியம் ஸ்டோரி
News
கமல்காந்த் ஷா, சரளா

எப்படிக் கொலை செய்யலாம் என்று இரண்டு பேரும் இன்டர்நெட்டில் மேய்ந்துள்ளனர்

‘‘தனது எதிரிகளை ஸ்லோ பாய்சன் கொடுத்துக் கொலைசெய்த இராக்கின் சதாம் உசேன் பற்றிய செய்தியின் தாக்கத்தால், கணவனையும் மாமியாரையும் கொலை செய்தேன்’’ என்ற மும்பை பெண்ணின் வாக்குமூலம் போலீஸாரையே அதிரவைத்திருக்கிறது.

மும்பை சாந்தாகுரூசில் வசித்தவர் 45 வயதாகும் கார்மென்ட் தொழிலதிபர் கமல்காந்த் ஷா. கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி வயிற்றுவலி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர், செப்டம்பர் 19-ம் தேதி உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்த நிலையில் இறந்துபோனார். அவருக்குச் சிகிச்சையளித்த மருத்துவர் ஆர்.கோயல், ‘‘கமல்காந்த்தின் ரத்தத்தில், அதிக அளவு விஷம் கலந்திருந்தது. நரம்பு மண்டலம், நுரையீரல், இதயம், சிறுநீரகத்தை பாதிக்கக்கூடிய தாலியம் என்ற உலோகமும் வழக்கத்தைவிட 350 மடங்கு அதிகமாக இருந்தது. விஷத்தையும் தாலியத்தையும் சாப்பாடு மூலம் கமல்காந்த்துக்கு யாரோ கொடுத்திருக்க வேண்டும்’’ என்று சந்தேகம் கிளப்பியிருந்தார்.

கமல்காந்த் ஷா, சரளா, காஜல்
கமல்காந்த் ஷா, சரளா, காஜல்

இதையடுத்து குற்றப்பிரிவு போலீஸாரின் விசாரணையில், கமல்காந்த் ஷாவின் மனைவி காஜல், தன் கணவருக்கு உணவில் சிறுகச் சிறுக விஷம் கலந்துகொடுத்தது உறுதியானது. மேலும், அண்மையில் இறந்துபோன காஜலின் மாமியார் சரளாவின் மரணத்துக்கும் காஜல்தான் காரணம் என்ற உண்மையும் வெளியுலகுக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்துவரும் போலீஸ் அதிகாரி கிருஷ்ணகாந்த் உபாத்யாயா, ‘‘கமல்காந்த்துக்கும், அவரின் மனைவி காஜலுக்கும் இடையே சுமுக உறவு இல்லை. இந்த நிலையில், ஹிதேஷ் ஜெயின் என்பவரோடு திருமணம் மீறிய உறவில் இருந்துவந்த காஜல், காதலன் துணையுடன் கணவரைக் கொல்ல திட்டம் தீட்டியிருக்கிறார்.

எப்படிக் கொலை செய்யலாம் என்று இரண்டு பேரும் இன்டர்நெட்டில் மேய்ந்துள்ளனர். அதில், இராக்கின் சதாம் உசேன் தன் எதிரிகளை ஸ்லோ பாய்சன் கொடுத்துக் கொலை செய்தது, டெல்லியைச் சேர்ந்த வருண் அரோரா, தன் மாமியாருக்கும் மைத்துனிக்கும் சிறுகச் சிறுக உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலைசெய்தது போன்ற க்ரைம் செய்திகளைப் படித்து அந்த டெக்னிக்கைத் தெரிந்துகொண்டிருக்கின்றனர். பின்னர் அதே பாணியில் கமல்காந்த்தை கொல்லத் திட்டம் தீட்டியவர்கள் முன்னதாக, கமல்காந்த்தின் தாயாருக்கு உணவில் தொடர்ச்சியாகக் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கலந்து கொடுத்துப் பரிசோதித்துள்ளனர்.

ஹிதேஸ்
ஹிதேஸ்

இது தொடர்பாக காஜல் அளித்திருக்கும் வாக்குமூலத்தில், ‘முதலில் எனது மாமியாருக்கு சாப்பாடு, தண்ணீரில் விஷத்தைக் கலந்துகொடுத்தேன். தினமும் 6-8 முறை தண்ணீர், இளநீர், ஜூஸ், பால் போன்றவற்றில் தொடர்ந்து விஷத்தைக் கலந்து கொடுத்துவந்தேன். அது சக்சஸானதால், அதே பாணியில் எனது கணவனுக்கும் விஷத்தைக் கலந்து கொடுக்க ஆரம்பித்தேன்’ என்று கூறியிருக்கிறார். ஆன்லைன் மூலம் விஷத்தை ஆர்டர் செய்து வாங்கிய ஹிதேஷ், தாலியத்தைத் தனக்கு தெரிந்த மருந்து வியாபாரி ஒருவரிடமிருந்து வாங்கியிருக்கிறார்’’ என்றார்.