Published:Updated:

வெளிநாட்டுக் கும்பலை ஏமாற்ற ரூ.39 லட்சம் கள்ள நோட்டு! - சிக்கிய மும்பை நகைக்கடைக்காரர்

பிடிபட்ட கள்ள நோட்டுகள்
பிடிபட்ட கள்ள நோட்டுகள்

வெளிநாட்டுக் கும்பலை ஏமாற்ற அவசரமாக ரூ.39 லட்சத்தை அச்சடித்த மும்பை நகைக்கடைக்காரர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வழக்கமாக வெளிநாட்டுக் கும்பல் சமூக வலைதளங்களில் பழகுபவர்களிடம் பணம், பரிசுப்பொருள் ஆசையைக் காட்டி லட்சக்கணக்கில் மோசடி செய்வது வழக்கம். அது போன்ற ஒரு மோசடியில் ஈடுபட நினைத்த கேமரூன் நாட்டுக் கும்பல் மும்பை ஜுவல்லரி உரிமையாளரிடம் மோசடி செய்ய நினைத்து ஏமாந்துள்ளனர். மும்பை மலாடு பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் கேமரூன் நாட்டைச் சேர்ந்த ஜான், ஸ்டீபன் ஆகியோர் அறை எடுத்துத் தங்கியிருந்தனர். அவர்கள் தங்கிய அறையை நகைக்கடைக்காரர் தரூன் என்பவர்தான் முன்பதிவு செய்திருந்தார். இந்தநிலையில், ஹோட்டலில் தங்கியவர்கள் வெளியில் சென்றுவிட்டு அறைக்குத் திரும்பவில்லை. ஆனால் ஹோட்டல் அறையை காலி செய்யவேண்டிய நேரம் வந்தது.

பிடிபட்ட கள்ள நோட்டுகள்
பிடிபட்ட கள்ள நோட்டுகள்

இதனால் ஹோட்டல் நிர்வாகம் தரூனுக்கு போன் செய்து இரண்டு பேரும் அறைக்குத் திரும்பவில்லை என்றும், அறையை காலி செய்துவிடவா அல்லது நீட்டிக்கவா என்றும் கேட்டிருக்கிறது. உடனே தரூன் அறையை காலி செய்துவிடுங்கள் என்று தெரிவித்தார். ஹோட்டல் ஊழியர்கள் அறையைச் சுத்தம் செய்தபோது உள்ளே பெரிய பேக் ஒன்று இருந்தது. அதில் 39.64 லட்சம் ரூபாய் பணம் இருந்தது. இது குறித்து ஹோட்டல் ஊழியர்கள் தரூனுக்கு போன் செய்து தகவல் கொடுத்தனர்.

உடனே அவை அனைத்தும் கள்ள நோட்டுகள் என்றும், அவற்றைக் குப்பையில் போட்டுவிடும்படியும் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து கள்ள நோட்டுகளைப் பறிமுதல் செய்தனர். அதோடு ஜுவல்லரி உரிமையாளர் தரூனையும் பிடித்துச் சென்று, அவரை விசாரித்தபோது ``கேமரூன் பிரஜைகள் இரண்டு பேர் சமூக வலைதளத்தில் அறிமுகமானார்கள். அவர்கள் தாங்களும் ஜூவல்லரி தொழில்தான் செய்வதாகத் தெரிவித்தனர்.

கள்ள நோட்டு
கள்ள நோட்டு

அவர்கள் தங்களிடம் 70 மில்லியன் டாலர் இருப்பதாகவும், அவற்றுக்கு ரூ.2,000 இந்திய நோட்டுகளை ஏற்பாடு செய்து கொடுத்தால் 20 சதவிகிதம் கமிஷன் கொடுப்பதாகவும் தெரிவித்தனர். இதற்கு தரூன் சம்மதித்தார். உடனே அவர்கள் இரண்டு பேரும் மும்பை வந்தனர். இரண்டு பேரும் தங்குவதற்கு ஹோட்டலில் தரூன் அறை ஏற்பாடு செய்து கொடுத்தார். உடனடியாக 39.64 லட்சம் அளவுக்கு 2,000 நோட்டுக்கள் தரூனிடம் இல்லை. இதனால் அவசரமாக தேவையான கள்ள நோட்டுகளை அச்சடித்துக் கொடுத்திருக்கிறார். ஆனால் அவை கள்ள நோட்டுகள் என்று தெரிந்ததும், கேமரூன் பிரஜைகள் ஹோட்டலை காலி செய்துவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு