Published:Updated:

உறவினர்களின் அந்தரங்க வீடியோ; சமூக வலைதளத்தில் வெளியிட்ட கோவை பெண் - கைது செய்த மும்பை போலீஸார்

சித்தரிப்பு படம்

குடும்ப பிரச்னையில் உறவினர்களை களங்கப்படுத்த அவர்களின் அந்தரங்க வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பெண் கைது செய்யப்பட்டார்.

உறவினர்களின் அந்தரங்க வீடியோ; சமூக வலைதளத்தில் வெளியிட்ட கோவை பெண் - கைது செய்த மும்பை போலீஸார்

குடும்ப பிரச்னையில் உறவினர்களை களங்கப்படுத்த அவர்களின் அந்தரங்க வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பெண் கைது செய்யப்பட்டார்.

Published:Updated:
சித்தரிப்பு படம்

மும்பை அந்தேரி ஜுகு பகுதியில் வசிப்பவர் பிரணவ் பாலாஜி. இவரின் குடும்ப உறுப்பினர்களின் அந்தரங்க வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியாகி இருந்தது. இது குறித்து பாலாஜி, ஜுகு போலீஸில் புகார் செய்தார். போலீஸார் சைபர் பிரிவு போலீஸாரின் உதவியோடு விசாரணை நடத்தி வந்தனர். அந்தரங்க வீடியோ வெளியானதால் பாலாஜி குடும்பத்தில் இரண்டு பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இது குறித்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் குடும்ப பிரச்னையில் அவர்களின் உறவுக்கார பெண் இக்காரியத்தை செய்திருப்பது தெரிய வந்தது.

பாலாஜியின் மூத்த சகோதரியின் மைத்துனி திவ்யா சண்முகம், பழிவாங்க பாலாஜியின் குடும்ப உறுப்பினர்களின் அந்தரங்க வீடியோவை திருடி அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது தெரிய வந்தது. திவ்யா சண்முகம் கோவையில் பெண்களுக்கான ஆடைகள், அழகு சாதனப்பொருட்கள் விற்பனை செய்யப்படும் 'பொட்டிக்' நடத்தி வந்தார். அவரை மும்பை போலீஸார் கோவையில் கைது செய்து மும்பை அழைத்து வந்துள்ளனர். இது குறித்து பாலாஜி கூறுகையில், ``கடந்த மார்ச் மாதம் எங்களது குடும்ப உறுப்பினர்களின் அந்தரங்க வீடியோ வெளியானதால் எனது தாயார் தற்கொலைக்கு முயன்றார்.

சமூக வலைதளம்!
சமூக வலைதளம்!

நானும் ஒரு முறை தற்கொலை செய்து கொள்ள முயன்றேன். யார் எங்களது அந்தரங்க வீடியோவை திருடி வெளியிட்டனர் என்று எங்களுக்கு கடைசி வரை தெரியவில்லை. போலீஸார் கண்டுபிடித்த பிறகுதான் இதனை திவ்யா செய்தது எங்களுக்கு தெரிய வந்தது. எங்களது குடும்பத்தின் பெயரை களங்கப்படுத்தவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக அவர் இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். எனது தாயார் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. இரண்டு மாதத்திற்கும் அதிகமாக எனது உறவினர்கள், நண்பர்கள் தொடர்ச்சியாக போன் செய்து ஆட்சேபகரமான வீடியோ பற்றி விசாரித்தனர்” என்று தெரிவித்தார்.

இது குறித்து சைபர் பிரிவு வழக்கறிஞர் பிரசாந்த் கூறுகையில், ``அதிகமானோருக்கு நாம் மாட்டிக்கொள்ளமாட்டோம் என்ற அளவுக்கு அதிகமான நம்பிக்கையில் இக்காரியத்தை செய்துமாட்டிக்கொள்கின்றனர். இதில் குற்றவாளி, வீடியோவை திருடி பழிவாங்குவதற்காகவும், பெயரை களங்கப்படுத்துவதற்காகவும் வீடியோவை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்” என்று தெரிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!