Published:Updated:

`பிரின்டிங் இங்கே; மாத்துறது அங்கே!' - ஆம்பூரில் கள்ளநோட்டு அச்சடித்த 2 பேரை வளைத்த மும்பை போலீஸ்

கைது செய்யப்பட்ட இரண்டு பேர்
கைது செய்யப்பட்ட இரண்டு பேர்

ஆம்பூரில் கள்ள நோட்டுகளை அச்சடித்து மும்பையில் மாற்ற முயன்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை தாராவியில் தமிழர்களின் ஆதிக்கம் அதிகம். இந்தப் பகுதியில் கள்ள நோட்டுகள் கை மாற்றப்படுவதாக மும்பை காவல்துறைக்குத் தொடர்ந்து புகார்கள் சென்றன. அதையடுத்து, தாராவியில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கள்ளநோட்டு
கள்ளநோட்டு

கடந்த 3-ம் தேதி ரூ.1 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை மாற்ற முயன்றதாகத் தமிழர் ஒருவரைக் கைதுசெய்தனர். விசாரணையில், தமிழகத்தில் வேலூர் சைதாப்பேட்டையைச் சேர்ந்த பாஸ்கரன் என்று தெரியவந்தது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த அய்யனூர் பகுதியில் உள்ள சரவணன் என்பவரது வீட்டில் கள்ள நோட்டுகளை அச்சடிப்பதாக பாஸ்கரன் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதையடுத்து, பாஸ்கரனை அழைத்துக்கொண்டு மும்பை போலீஸார் தமிழகத்துக்கு விரைந்தனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு பேர்
கைது செய்யப்பட்ட இரண்டு பேர்

இன்று அதிகாலை ஆம்பூர் போலீஸாரின் உதவியுடன் அய்யனூர் பகுதிக்குச் சென்று சரவணனின் வீட்டைச் சுற்றி வளைத்து அதிரடியாக வீட்டுக்குள் சென்று சோதனையிட்டனர். ரூ.7,55,700 மதிப்புள்ள 200, 500 ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடித்து வைத்திருந்ததைக் கைப்பற்றினர்.

கலர் ஜெராக்ஸ் மெஷின் மற்றும் நோட்டுகளைக் கச்சிதமாக வெட்டும் மெஷினையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, சரவணனையும் கைதுசெய்து ஆம்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, மும்பைக்கு அழைத்துச் சென்றனர்.

ஜெராக்ஸ் மெஷின்
ஜெராக்ஸ் மெஷின்

இதேபோல், 2018-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி, ஆம்பூர் ஆலாங்குப்பத்தில் 2000 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்ற சென்னை மூலக்கடையைச் சேர்ந்த சதாம் உசேன், ஜோலார்பேட்டை வக்கணம்பட்டியைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைதுசெய்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு