Published:Updated:

மும்பை: ரெய்டில் சிக்கிய ரூ.30 கோடி; ரூ.6 கோடியை அபகரித்துக்கொண்ட போலீஸார் - 10 பேர் சஸ்பெண்ட்

மும்பை - மும்ப்ரா போலீஸார்

மும்பையில் ரெய்டில் பிடிபட்ட ரூ.30 கோடியில் 6 கோடியை அபகரித்துக்கொண்ட 10 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மும்பை: ரெய்டில் சிக்கிய ரூ.30 கோடி; ரூ.6 கோடியை அபகரித்துக்கொண்ட போலீஸார் - 10 பேர் சஸ்பெண்ட்

மும்பையில் ரெய்டில் பிடிபட்ட ரூ.30 கோடியில் 6 கோடியை அபகரித்துக்கொண்ட 10 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Published:Updated:
மும்பை - மும்ப்ரா போலீஸார்

மும்பை தானே அருகிலுள்ள மும்ப்ராவைச் சேர்ந்தவர்கள் பைசல் மேமன், ஷேக் இப்ராகிம். இருவரும் பொம்மை வியாபாரம் செய்துவருகின்றனர். பைசல் வீட்டில் சட்டவிரோதமாகப் பணம் இருப்பதாக கேள்விப்பட்ட 10 போலீஸார் கடந்த மாதம் 12-ம் தேதி அவரின் வீட்டில் நள்ளிரவில் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் 30 கோடி ரூபாய் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. 30 பாக்ஸ்களில் தலா ஒரு கோடி வீதம் இந்தப் பணம் இருந்தது. அவை கறுப்பு பணம் என்று கூறி பணத்தை எடுத்துச் சென்றனர். இதையடுத்து இருவரும் போலீஸ் நிலையம் சென்று பணத்தைத் திருப்பிக் கேட்ட போது ரூ.2 கோடி கொடுத்தால் பிரச்னையை தீர்த்துக்கொள்ளலாம் என்று தெரிவித்தனர். அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். ஆனால் பணத்தை வீட்டுக்கு கொண்டு வந்து எண்ணிப் பார்த்தபோது 6 கோடி ரூபாயை போலீஸார் எடுத்திருந்தது தெரியவந்தது.

போலீஸார்
போலீஸார்

இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் இது குறித்து மாநில உள்துறை அமைச்சர் மற்றும் தானே போலீஸ் கமிஷனருக்கு புகார்க் கடிதம் அனுப்பினர். அக்கடிதம் கடந்த மாதம் 25-ம் தேதி சமூக வலைதளத்திலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் அடிப்படையில் துணை கமிஷனர் அவினாஷ் விசாரணை நடத்தினார். விசாரணையில் மூன்று போலீஸ் அதிகாரிகள் உட்பட 10 பேர் இந்த மோசடியில் தொடர்புகொண்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தானே போலீஸ் கமிஷனர் ஜெய் ஜீத் சிங் விரைந்து செயல்பட்டு இன்ஸ்பெக்டர் கீதாராம் உட்பட 10 போலீஸாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். அதோடு உதவி போலீஸ் கமிஷனர் அந்தாலே, சீனியர் இன்ஸ்பெக்டர் அசோக் ஆகியோர் மீது துறைரீதியிலான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism