Published:Updated:

மும்பை: கணவனைக் கொலைசெய்து சடலத்தை கட்டிலுக்கடியில் மறைத்த மனைவி! - ஆண் நண்பருடன் கைதுசெய்த போலீஸ்

கொலை

கணவனைக் கொலைசெய்துவிட்டு தலைமறைவான மனைவியையும், அவரின் ஆண் நண்பரையும் போலீஸார் கைதுசெய்தனர்.

மும்பை: கணவனைக் கொலைசெய்து சடலத்தை கட்டிலுக்கடியில் மறைத்த மனைவி! - ஆண் நண்பருடன் கைதுசெய்த போலீஸ்

கணவனைக் கொலைசெய்துவிட்டு தலைமறைவான மனைவியையும், அவரின் ஆண் நண்பரையும் போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
கொலை

மும்பை, சாக்கி நாக்கா பகுதியில் நசீம் காம் (22) என்பவர் தன் மனைவி ரூபினாவுடன் வாடகைக்கு வீடெடுத்து வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில தினங்களாக நசீம் கானின் வீடு பூட்டிக் கிடந்திருக்கிறது. ஊரிலிருந்து தன் மகன் நசீம் கானைப் பார்ப்பதற்காக அவர் தந்தை வந்திருக்கிறார். அப்போது வீடு பூட்டியிருப்பதைக் கண்ட அவர், அக்கம் பக்கத்தில் தன் மகன், மருமகள் குறித்து விசாரித்துவிட்டு ஊருக்குத் திரும்பியிருக்கிறார்.

இந்த நிலையில், நசீம் கான் தங்கியிருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. உடனே இது குறித்து பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து வீட்டை திறந்து சோதித்துப் பார்த்தபோது, படுக்கை அறையிலிருந்த கட்டிலுக்கு அடியில் நசீம் கானின் அழுகிய உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

கொலை
கொலை

உடனே அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீஸார், நசீம் கான் மனைவியை தொடர்புகொள்ள முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து அவர் எங்கிருக்கிறார் என்பதை அவர் மொபைல் போன் சிக்னல் மூலம் கண்டுபிடித்து அவரைக் கைதுசெய்தனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் ரூபினாவின் ஆண் நண்பர் சைஃப் பரூக்கி (21) என்பவரையும் போலீஸார் கைதுசெய்தனர்.

இருவரையும் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்களைக் கூறியிருக்கின்றனர். ரூபினா போலீஸாரிடம், ``எனக்கும், என் கணவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்தது. கடந்த 14-ம் தேதி இரவும் இதே போன்று சண்டை நடந்தது. ஆனால், அந்தச் சண்டை இத்தோடு முடிய வாய்ப்பு இல்லை என்பதால் காலையிலும் தொட வாய்பிருப்பதாகக் கருதி சைஃப்புக்கு போன்செய்து காலையில் வீட்டுக்கு வந்துவிட்டு போகும்படி கேட்டுக்கொண்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கைது
கைது

காலையிலும் தொடர்ந்து சண்டை நடந்தது. அந்த நேரம் அங்குவந்த சைஃப் எங்களின் சண்டையை விலக்கி விடப்பார்த்தார். ஆனால் முடியவில்லை. இதனால் வீட்டிலிருந்த உண்டியலை எடுத்து என் கணவரின் தலையில் சைஃப் ஓங்கி அடித்தார். அதில் தரையில் விழுந்தவரை சைஃப் கழுத்தை நெரித்துக் கொலைசெய்தார். அதன் பிறகு உடலை கட்டிலுக்குள் மறைத்து வைத்துவிட்டு சென்றுவிட்டோம்" எனக் கூறியிருக்கிறார்.

இருவரையும் கைதுசெய்த போலீஸார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது .