Published:Updated:

கட்டர் மெஷினால் துண்டு துண்டாக்கப்பட்ட உடல்! - கோவையில் குலைநடுங்க வைத்த கொலை!

கோவையில் குலைநடுங்க வைத்த கொலை
பிரீமியம் ஸ்டோரி
கோவையில் குலைநடுங்க வைத்த கொலை

ஒருகட்டத்தில் டார்ச்சராகி அவர்கள் பிரபுவைக் கொலை செய்யத் திட்ட மிட்டனர். கிட்டத்தட்ட ஒரு வாரம் இந்தத் திட்டமிடல் நடந்திருக்கிறது.

கட்டர் மெஷினால் துண்டு துண்டாக்கப்பட்ட உடல்! - கோவையில் குலைநடுங்க வைத்த கொலை!

ஒருகட்டத்தில் டார்ச்சராகி அவர்கள் பிரபுவைக் கொலை செய்யத் திட்ட மிட்டனர். கிட்டத்தட்ட ஒரு வாரம் இந்தத் திட்டமிடல் நடந்திருக்கிறது.

Published:Updated:
கோவையில் குலைநடுங்க வைத்த கொலை
பிரீமியம் ஸ்டோரி
கோவையில் குலைநடுங்க வைத்த கொலை

க்ரைம் திரில்லர் சினிமாக்களை மிஞ்சும் வகையில், கொலைசெய்த உடலை மரம் அறுக்கும் கட்டர் மெஷின் உதவியுடன் 12 துண்டுகளாகக் கூறு போட்டு வீசிய கொடூரம் கோவையை அலறவைத்திருக்கிறது!

கடந்த 15-9-22 அன்று கோவை, துடியலூர் அருகே குப்பைத்தொட்டி ஒன்றில், இரண்டாகத் துண்டிக்கப்பட்ட ஆணின் கை கண்டறியப்பட்ட சம்பவம் காவல்துறையையே பதறவைத்தது. ‘இந்தக் கை யாருடையது... கொலை என்றால், தலையும் உடலும் எங்கே?’ என்ற தேடுதல் வேட்டையில், 50 போலீஸார் அடங்கிய எட்டு தனிப்படைகள் களமிறங்கின.

கோவை தொடங்கி கேரளா வரை, 250 சிசிடிவி கேமராப் பதிவுகள், மருத்துவமனைகள், தொழிற்கூடங்கள், 500-க்கும் மேற்பட்ட கைரேகை மாதிரிகள், காணாமல்போனவர்கள் குறித்த விவரங்கள் என விசாரணை வளையத்தை போலீஸார் பெரிதாக்கிய பிறகே வழக்கில் துப்பு கிடைத்தது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் கணவர் பிரபுவைக் கடந்த 14-ம் தேதிக்குப் பிறகு காணவில்லை; தொடர்பும் கொள்ள முடியவில்லை என்று காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

கட்டர் மெஷினால் துண்டு துண்டாக்கப்பட்ட உடல்! - கோவையில் குலைநடுங்க வைத்த கொலை!

இந்தப் புகாரின் அடிப்படையில், சரவணம் பட்டியில் பிரபு தங்கியிருந்த வீட்டுக்குச் சென்று ஆய்வுசெய்தது போலீஸ். அங்கிருந்த வாட்டர் பாட்டிலில் பிரபுவின் கைரேகை மாதிரிகளுடன், குப்பைத்தொட்டியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட கையின் ரேகைகள் ஒத்துப்போனதையடுத்து விசாரணை வேகமெடுத்தது.

இது குறித்து விவரிக்கும் தனிப்படை போலீஸார், ‘‘பிரபு, காந்திபுரம் பகுதியிலுள்ள ஒரு பியூட்டி பார்லரில் வேலை பார்த்திருக்கிறார். ஏற்கெனவே விவாகரத்தானவரான பிரபு, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவதாக இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறார். அவர் ஈரோட்டில் இருக்கிறார். பிரபுவின் செல்போன் தொடர்புகளை ட்ராக் செய்தபோது அவருக்குப் பல பெண்களுடன் திருமணம் தாண்டிய உறவு இருந்தது தெரியவந்தது. மிடுக்கான தோற்றம்கொண்ட பிரபு, பியூட்டி பார்லருக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் அன்பொழுகப் பேசுவதுடன், அவர்களது தேவைகளை இன்முகத்துடன் செய்வாராம். இதனால் பிரபுவின் வலையில் நிறைய பெண்கள் விழுந்துள்ளனர். அவர்களில், கடைசியாக பிரபு தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரான கவிதாவும் ஒருவர். ஆனால், கவிதாவுக்கு பிரபு மட்டுமன்றி எலெக்ட்ரீஷியன் திவாகர் என்பவருடனும் உறவு இருந்திருக்கிறது.

இந்த மூவரும் தங்கள் உடல் அழகு மற்றும் இளமைக்காக ஒரு மாத்திரையைச் சாப்பிடும் வழக்கத்தைக்கொண்டவர்கள். அந்த மாத்திரை பழக்கத்தில்தான் இவர்களுக்குள் உறவே ஏற்பட்டிருக்கிறது. நாளடைவில் கவிதா, திவாகருடன் ஒட்டிக்கொண்டு, பிரபுவுடனான உறவைத் துண்டிக்க முற்பட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பிரபு, கவிதாவுடன் தனிமையில் இருந்த வீடியோக்களைக் காண்பித்து மிரட்டி யிருக்கிறார். பணம் கேட்டும் மிரட்டிய தாகச் சொல்கிறார்கள்.

கட்டர் மெஷினால் துண்டு துண்டாக்கப்பட்ட உடல்! - கோவையில் குலைநடுங்க வைத்த கொலை!

ஒருகட்டத்தில் டார்ச்சராகி அவர்கள் பிரபுவைக் கொலை செய்யத் திட்ட மிட்டனர். கிட்டத்தட்ட ஒரு வாரம் இந்தத் திட்டமிடல் நடந்திருக்கிறது. கடந்த 14-ம் தேதி இரவு, சரவணம்பட்டியிலுள்ள வீட்டுக்கே சென்று பிரபுவை அழைத்துவந்த அவர்கள், திவாகரின் அறையில்வைத்து கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். பிரபுவின் உடை, செல்போன் போன்றவற்றையும் தீயிட்டு எரித்துவிட்டனர். பின்னர் மரம் அறுக்கும் ‘கட்டர் மெஷின்’ உதவியுடன் பிரபுவின் உடலை தலை, கை கால் எனத் தனித்தனியே 12 துண்டுகளாக வெட்டி எடுத்துள்ளனர். அந்த பாகங்களை சாதாரணக் குப்பைபோல தனித்தனியே பாலிதீன் கவர்களில் பேக்கிங் செய்து கொஞ்சம் கொஞ்சமாக பைக்கில் எடுத்துச் சென்றுள்ளனர். முதலில் பீளமேடு அருகேயுள்ள ஒரு குப்பைத்தொட்டியில் பாகங்களைப் போடச் சென்றுள்ளனர். அங்கு போலீஸ் வாகனத்தைப் பார்த்தவுடன் எஸ்கேப்பாகிவிட்டனர். பின்னர் அங்கிருந்து பைக்கில் வந்து துடியலூர் அருகேயுள்ள குப்பைத்தொட்டியில் போட்டுள்ளனர். `இப்படி சாதாரணக் குப்பைபோல போட்டுவிட்டால், குப்பைக் கிடங்கில் போட்டு எரித்துவிடுவார்கள், தடயம் எதுவும் கிடைக்காது, நம்மையும் பிடிக்க முடியாது’ என்று நினைத்திருக்கின்றனர். ஆனால், துடியலூர் குப்பைத் தொட்டியில் அவர்கள் அவசரத்தில் போட்டபோது கை வெளியே வந்து விட்டது. அது மட்டும் நடக்கவில்லை யென்றால் இந்த வழக்கு வெளியிலேயே தெரிந்திருக்காது. வெள்ளலூர் குப்பைக் கிடங்கிலிருந்து இரண்டு கால்களையும், திருப்பூர் அருகே பாழடைந்த கிணற் றிலிருந்து தலையையும் கண்டு பிடித்தோம்’’ என்று பெருமூச்செறிந்தனர்.

கவிதா, திவாகர், கார்த்திக்
கவிதா, திவாகர், கார்த்திக்

வழக்கு குறித்துப் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், ‘‘இந்தச் சம்பவத்தில், கவிதா, திவாகர், அவருடைய நண்பர் கார்த்திக் என மூவரும் இணைந்து செயல்பட்டுள்ளனர். பொதுவாக இது போன்ற வழக்குகளில் தலை பாகம் கிடைத்தால்தான் வழக்கை முடிக்க முடியும். ஆனால், இந்த வழக்கைப் பொறுத்தவரை தலையைக் கண்டுபிடிக்கும் முன்பே, இறந்தவர் யார் என்று கண்டுபிடித்ததால்தான் குற்றவாளிகளைப் பிடிக்க முடிந்தது” என்றார்.

ஆளவந்தார் கொலை வழக்கை நினைவூட்டுகிறது இந்தச் சம்பவம்!