Published:Updated:

சிசிடிவி ஸ்கெட்ச், நெட்ஃப்ளிக்ஸ் மாஸ்க், ஃபேஸ் சர்ஜரி! `லலிதா’ முருகனின் திடுக் திட்டங்கள்

murugan

கொள்ளையின்போது அடையாளத்தை மறைக்க, மிக்கி மவுஸ் முகமூடி மற்றும் கையுறை அணிந்து கைவரிசைகாட்டியது சினிமா பார்த்துதானாம். இதெல்லாம், 'வடமாநிலத்தவர் டெக்னிக்' எனத் தமிழக போலீஸார் குழம்பி நிற்க, ஹாயாக வலம்வந்துள்ளார் முருகன்.

சிசிடிவி ஸ்கெட்ச், நெட்ஃப்ளிக்ஸ் மாஸ்க், ஃபேஸ் சர்ஜரி! `லலிதா’ முருகனின் திடுக் திட்டங்கள்

கொள்ளையின்போது அடையாளத்தை மறைக்க, மிக்கி மவுஸ் முகமூடி மற்றும் கையுறை அணிந்து கைவரிசைகாட்டியது சினிமா பார்த்துதானாம். இதெல்லாம், 'வடமாநிலத்தவர் டெக்னிக்' எனத் தமிழக போலீஸார் குழம்பி நிற்க, ஹாயாக வலம்வந்துள்ளார் முருகன்.

Published:Updated:
murugan

தமிழகம் மட்டுமன்றி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட 4 மாநிலங்களில் உள்ள நகைக்கடைகள் மற்றும் வங்கிகளின் பட்டியல், அப்டேட் தகவல்கள் மற்றும் ப்ளூ பிரின்ட் உள்ளிட்டவை முருகன் கையில் எப்போதும் இருக்கும். அந்தளவுக்குப் புள்ளிவிவரப் புலி.

``கேமரா பதிவு தானா அழிஞ்சிரும்!" 

லலிதா ஜுவல்லரி கொள்ளை விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததும், திருச்சி போலீஸார் முருகனின் ஊர்க்காரர்கள் மற்றும் குடும்பத்தாரை அள்ளிக்கொண்டு வந்துவிட்டார்கள். தப்பிச் சென்ற சுரேஷ் மற்றும் முருகன் இருவரும் பின்னர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

சுரேஷிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், ``கொள்ளையடிக்கும் இடத்தை முடிவு செய்ததும், அந்த இடத்தில் வாடிக்கையாளர்களைப்போல் நேரில் சென்று நோட்டமிடுவோம்.

திருச்சி கொள்ளைச் சம்பவம்
திருச்சி கொள்ளைச் சம்பவம்

அடுத்து ஒரு மாதம் அந்தப்பக்கமே போகமாட்டோம். நோட்டமிட்ட எங்கள் முகம், சிசிடிவி கேமராவில் பதிந்திருந்தால், போலீஸாரிடம் சிக்கிவிட வாய்ப்பிருக்கிறது. பொதுவாக, சிசிடிவி கேமரா பதிவு ஒருமாதத்தில் தானாக அழிந்துவிடும். அதுவரை காத்திருந்து கைவரிசை காட்டுவோம்” என்றதும் போலீஸாரே அசந்துபோனார்கள்.

``சிசிடிவி கேமரா பதிவுகள் தானாக அழிய ஒரு மாதம்வரை ஆகும். அதுவரை காத்திருப்போம்"
சுரேஷ்

இந்த விவரம் தெரிந்தபின், திருச்சி மாநகர போலீஸார், ``சிசிடிவி பதிவுகளை நீண்டகாலம் சேமித்து வைக்கும் டெக்னாலஜி உள்ளது. அதைப் பயன்படுத்துங்கள்” எனப் பொதுமக்களை அலர்ட் செய்ய ஆரம்பித்துள்ளார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

போலீஸை குழம்ப வைத்த டெக்னிக்!

சினிமா எடுப்பதில் முருகனுக்கு அவ்வளவு ஆர்வம். உள்ளூர் சினிமா முதல் ஆங்கிலப்படங்கள் வரை எல்லாவற்றையும் பார்த்து விடுவோம் என்றுகூறி போலீஸை மிரள வைத்திருக்கிறார். லலிதா ஜுவல்லரி கொள்ளையின்போது, அடையாளத்தை மறைக்க மிக்கி மவுஸ் முகமூடி மற்றும் கையுறை அணிந்து கைவரிசைகாட்டியதெல்லாம் சினிமா பார்த்துத்தானாம். இதெல்லாம், 'வடமாநிலத்தவர் டெக்னிக்' எனத் தமிழக போலீஸார் குழம்பி நிற்க, ஹாயாக வலம்வந்துள்ளார் முருகன்.

திருச்சி நீதிமன்றத்தில் கொள்ளையன்  சுரேஷ்
திருச்சி நீதிமன்றத்தில் கொள்ளையன் சுரேஷ்

நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் மிகவும் பிரபலமான `மணி ஹெய்ஸ்ட்' க்ரைம் தொடரில் வரும், ஸ்பெயின் வங்கிக் கொள்ளையை ஒத்துப்போகிறதாம் முருகனின் ஸ்டைல். கொள்ளையடிக்கும்போது செல்போன் பயன்படுத்தினால், போலீஸார் டிரேஸ் செய்யக்கூடும் என வாக்கி டாக்கியைப் பயன்படுத்தியுள்ளார்கள். அதையும் போலீஸார் மோப்பம் பிடித்துவிட, வாக்கி டாக்கியைத் தூக்கிப்போட்டுவிட்டு, கயிறு டெக்னிக்கை கையில் எடுத்தனர்.

முருகன் அடையாளம் தெரியாத அளவுக்குத் தனது கெட்டப்பை மாற்றிவிட்டார். முன்பல் கட்டியிருக்கிறார். தலைமுடி நட்டிருக்கிறார். பிளாஸ்டிக் சர்ஜரியும் செய்திருக்கிறார்.

இடுப்பில் கயிற்றைக் கட்டிக்கொண்டு கொள்ளையடிக்கும் வங்கி அல்லது கடைக்குள் நுழையும் முருகனுக்கு, வெளியில் கண்காணிப்பில் உள்ளவர்கள், கயிற்றை ஆட்டி அலர்ட் மெசேஜ் கொடுப்பார்களாம்.

முன்பல், பிளாஸ்டிக் சர்ஜரி...

லலிதா ஜுவல்லரி கொள்ளையில் முருகனுக்குத் தொடர்பு இருப்பது தெரிந்ததும் போலீஸார் கைவசம் வைத்திருந்த அவரின் பழைய புகைப்படத்தை அனைத்து ஸ்டேஷன்களுக்கும் பகிர்ந்து தேடத் தொடங்கினார்கள். ஆனால், முருகன் அடையாளம் தெரியாத அளவுக்குத் தனது கெட்டப்பை மாற்றிவிட்டார். முன்பல் கட்டியிருக்கிறார். தலைமுடி நட்டிருக்கிறார். பிளாஸ்டிக் சர்ஜரியும் செய்திருக்கிறார். ஹெச்ஐவி இருந்ததால் குறிப்பிட்ட நாளுக்கு ஒருமுறை ரத்தமும் ஏற்றிக்கொண்டு திடமாக வலம் வந்திருக்கிறார்.

murugan
murugan

முருகன் கும்பல்தான் திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையிலும் ஈடுபட்டது என்று, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. முருகனுக்கு சிறையில் பழக்கமான கணேசன் என்பவருக்கும் இந்தக் கொள்ளையில் பங்கு இருந்துள்ளது. சுவர்களை உடைக்க, அதிநவீன ஹைடெக் இயந்திரங்களைப் பயன்படுத்தியுள்ளனர். கணேசனின் உறவினர் வெல்டர் ராதாகிருஷ்ணன் இந்த உபகரணங்களைப் பயன்படுத்துவதில் கை தேர்ந்தவராம்.

திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த கணேசனை, கடந்த 18–ம் தேதி திருச்சி மாவட்ட தனிப்படை போலீஸார், தங்கள் கஸ்டடியில் எடுத்தார்கள். கணேசனை 7 நாள்கள் போலீஸார் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி தந்தது. அதையடுத்து, திருச்சி சமயபுரம் போலீஸார் கணேசனை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.

இந்நிலையில், கணேசன் அவரது சொந்த ஊரான மதுரை, வாடிப்பட்டி, குருவித்துறை, அம்பலக்காரதெரு பகுதியில் மறைத்து வைத்திருந்த, 2 கோடியே 30 லட்சம் மதிப்பிலான 6.100 கிலோ நகைகள் கைப்பற்றப்பட்டன.

`சுற்றுலா வேன்' டெக்னாலஜி

விசாரணையில், “முருகனுக்கும், எனக்கும் சேலம் சிறையில் இருக்கும்போது பழக்கம். அவருடன் ஆரம்பத்திலிருந்து இருக்கும் தினகரன் மற்றும் சுரேஷ் உள்ளிட்டோருக்கு அடுத்தபடியாக என்னையும் முருகன் இணைத்துக்கொண்டார். கடந்த சில வருடங்களாக, கொள்ளையடிக்கும் நகைகளை முருகன் என்னிடம் கொடுப்பார். அதைப் பணமாக மாற்றிக் கொடுப்பேன்.

சொகுசு வேன்
சொகுசு வேன்

கடந்த டிசம்பர் மாதத்திற்கு முன்பு, எனக்கு போன் செய்த முருகன், `கொள்ளையடிப்பதற்கு வசதியாக ஒரு வாகனம் தேவை’ என்றார். வாங்கும் வாகனம், பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் சந்தேகம் வராதபடி இருக்கவேண்டும் என்று முடிவெடுத்தோம். ஒரு லட்சம் முன் பணம் கொடுத்து இ.எம்.ஐ மூலம் சொகுசு வேன் வாங்கினேன். அந்த வேனில் சுற்றுலா செல்வதைப்போலவே, கொள்ளையடிக்கும் பகுதிகளை நோட்டமிட்டு ஆள் அரவம் இல்லாத நேரங்களில் உள்ளே புகுந்துவிடுவோம்.

திருச்சியில் பல வங்கிகளைக் குறிவைத்தோம். முருகன், திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியை வேவுபார்த்து நாள் குறித்தார். வழக்கம்போல விடுமுறை நாள்களைத் தேர்ந்தெடுத்தோம். நவீன கருவிகள் மற்றும், கேஸ் வெல்டிங் சிலிண்டர்கள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தினோம்.

வேனுக்கு ஒன்டைம் பேமன்ட்!

கொள்ளையடித்த நகைகளை மூட்டை கட்டி, வேனில் ஏற்றிக்கொண்டு கிளம்புவோம். பொதுவாக போலீஸார், சிறிய கார்களையே சோதனை செய்வார்கள். டூரிஸ்டர் வேன்களை கண்டுகொள்ளமாட்டார்கள். அது எங்களுக்கு வசதியாக இருந்தது” என்ற கணேசன், பஞ்சாப் நேஷனல் வங்கிக் கொள்ளைக்குப் பிறகு, கிடைத்த பணத்தில் சிங்கில் பேமன்ட்டாக வேனின் மொத்த மாத தவணையையும் அடைத்துவிட்டேன்” என்றார்.

Heist ganesan
Heist ganesan

அதெல்லாம் சரி, “பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை எங்கே வைத்துள்ளாய்” என போலீஸார் கேட்டபோது ”கொள்ளையடிக்கும் மொத்த நகையையும் உருக்கிடுவோம். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக, சந்தையில் மாற்றிப் பணமாக்குவோம். அந்த நகைகள் அனைத்தையும் உருக்கிவிட்டோம். இன்னும் கொஞ்சநாள் போயிருந்தால், லலிதா ஜுவல்லரி நகைகளையே உருமாற்றியிருப்போம்” என்றாராம்.

உருக்கப்பட்ட நகைகளை முருகன், பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்துள்ளாராம். முருகன் கொடுத்த தகவல்படி, பெங்களூரு போலீஸார் அந்த நகைகளைக் குறிவைத்து சென்னை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் முகாமிட்டுள்ளார்களாம்.