Published:Updated:

"இஸ்லாத்துக்கு மாறி என்னைத் திருமணம் செய்துகொள்"- இந்துப் பெண்ணுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

கைது

மத்தியப் பிரதேச மாநிலத்தில் முஸ்லிம் நபர் இந்துப் பெண் ஒருவரிடம், இஸ்லாத்துக்கு மதம் மாறித் தன்னைத் திருமணம் செய்துகொள்ளாவிட்டால், ஆசிட் வீசிவிடுவேன் என்று மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

"இஸ்லாத்துக்கு மாறி என்னைத் திருமணம் செய்துகொள்"- இந்துப் பெண்ணுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

மத்தியப் பிரதேச மாநிலத்தில் முஸ்லிம் நபர் இந்துப் பெண் ஒருவரிடம், இஸ்லாத்துக்கு மதம் மாறித் தன்னைத் திருமணம் செய்துகொள்ளாவிட்டால், ஆசிட் வீசிவிடுவேன் என்று மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
கைது

இந்தியாவில் ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்துக்கு மாறுவதென்பது அங்கீகரிப்பட்ட ஒன்றுதான். அதேசமயம், விருப்பமில்லாத ஒருவரை மதம் மாறச்சொல்லிக் கட்டாயப்படுத்துவதென்பது தண்டனைக்குரிய செயல். இந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் முஸ்லிம் நபர் இந்துப் பெண் ஒருவரிடம், இஸ்லாத்துக்கு மதம் மாறித் தன்னைத் திருமணம் செய்துகொள்ளாவிட்டால், ஆசிட் வீசிவிடுவேன் என்று மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

துன்புறுத்தல்
துன்புறுத்தல்

மோனு மன்சூரி என அறியப்படும் அந்த நபர், கண்ட்வாவிலுள்ள எஸ்.என்.கல்லூரியின் முன்பு, நர்ஸிங் படிக்கும் 19 வயது இந்துப் பெண்ணை வழிமறித்திருக்கிறார். அப்போது அந்த நபர், ``இஸ்லாத்துக்கு மதம் மாறி என்னைத் திருமணம் செய்துகொள். இல்லையெனில் உன்மேல் ஆசிட் வீசிவிடுவேன்" என மிரட்டல் விடுத்தாகக் கூறப்படுகிறது. அதையடுத்து அந்தப் பெண் உடனடியாக போலீஸிடம் இது குறித்துப் புகாரளித்திருக்கிறார்.

பின்னர் அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த போலீஸார், மோனு மன்சூரியை மத்தியப் பிரதேச மதச் சுதந்திரச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து கைதுசெய்தனர். இந்த மத்தியப் பிரதேச மதச் சுதந்திர சட்டம், திருமணத்துக்காக மதம் மாறச்சொல்லி மிரட்டல் விடுப்பதற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு வழிவகுக்கிறது.

கைது
கைது

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்தப் பெண், ``அவன் ஒரு முஸ்லிம். எங்கள் கிராமத்திலிருந்து தினமும் கல்லூரிக்கு என்னைப் பின்தொடர்ந்தான். திடீரென அவன் என் கையைப் பிடித்ததும் நான் கத்தினேன். உடனே அவன் என்மீது பூக்களை வீசிவிட்டு என்னைக் கொன்றுவிடுவேன் எனக் கூறினான். அதுமட்டுமல்லாமல் தான் துப்பாக்கியுடன் இருக்கும் படத்தையும் அவன் எனக்கு அனுப்பினான். `என்னைத் திருமணம் செய்துகொண்டு மதம் மாறிவிடு... இல்லையென்றால் உன்னைக் கொன்றுவிடுவேன்' என என்னை மிரட்டினான். அதனால் பயந்துபோன நான் உடனடியாக போலீஸில் இது தொடர்பாகப் புகாரளித்தேன்" என்று கூறினார்.