Published:Updated:

நாசிக்கில் இஸ்லாமிய மதத் தலைவர் சுட்டுக் கொலை - முன்பகை, மதப்பிரச்னை கோணங்களில் விசாரணை

குவாஜா

மகாராஷ்டிராவில் இஸ்லாமிய மதத் தலைவர் ஒருவர் பட்டப்பகலில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதன் காரணமாக அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. போலீஸ் குவிக்கப்பட்டிருக்கிறது.

நாசிக்கில் இஸ்லாமிய மதத் தலைவர் சுட்டுக் கொலை - முன்பகை, மதப்பிரச்னை கோணங்களில் விசாரணை

மகாராஷ்டிராவில் இஸ்லாமிய மதத் தலைவர் ஒருவர் பட்டப்பகலில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதன் காரணமாக அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. போலீஸ் குவிக்கப்பட்டிருக்கிறது.

Published:Updated:
குவாஜா

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் அருகிலுள்ள யோலா என்ற இடத்தில் வசித்துவந்தவர் குவாஜா சையத் சிஷ்டி(35). ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சிஷ்டியை அப்பகுதி மக்கள் அனைவரும் `சுபி பாபா’ என்று அழைத்து வந்தனர். சிஷ்டி, யோலா நகரில் தொழிற்பேட்டைப் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த நான்கு பேர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே சிஷ்டி உயிரிழந்தார். கொலையாளிகள் அப்படியே செல்லாமல் சிஷ்டி பயன்படுத்திய காரையும் எடுத்துச் சென்றுவிட்டனர். கொலைக்கான காரணம் தெரியவில்லை. இந்தக் கொலை குறித்து அங்கிருந்தவர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து சிஷ்டியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு விசாரணை நடத்திவருகின்றனர்.

குவாஜா
குவாஜா

கொலையாளிகளைக் கண்டுபிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்துள்ளனர். முன்பகை காரணமாக இந்தப் படுகொலை நடந்ததா அல்லது மதப்பிரச்னையில் இந்தச் சம்பவம் நடந்ததா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். ஏற்கெனவே மகாராஷ்டிராவின் அமராவதியில் பாஜக பிரமுகர் நுபுர் ஷர்மா தெரிவித்த கருத்துக்கு ஆதரவாக வாட்ஸ்அப்பில் கருத்து பதிவிட்ட மருந்துக் கடைக்காரர் உமேஷ் என்பவர் கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இதே போன்று ராஜஸ்தானிலும் டெய்லர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இரண்டு வழக்குகளையும் தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்திவருகிறது. தற்போது மகாராஷ்டிராவில் இஸ்லாமிய மதத் தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதால் பதட்டம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் கொலை நடந்த யோலா நகரில் பதற்றம் அதிகரித்திருக்கிறது. கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!