Published:Updated:

பிலிப்பைன்ஸில் எம்பிபிஎஸ் படித்து வந்த தமிழக மாணவர் மர்ம மரணம்! - நடந்தது என்ன?

எம்பிபிஎஸ் மாணவர் பிரதீப்

``பிலிப்பைன்ஸில் எவ்விதப் பிரச்னையும் இருந்ததாக எங்களிடம் கூறவில்லை. படிப்பும் நன்றாக போய் கொண்டிருந்தது. இன்னும் 2 மாதங்களில் படிப்பை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவேன் எனக் கூறியிருந்தான். இந்நிலையில்...”

பிலிப்பைன்ஸில் எம்பிபிஎஸ் படித்து வந்த தமிழக மாணவர் மர்ம மரணம்! - நடந்தது என்ன?

``பிலிப்பைன்ஸில் எவ்விதப் பிரச்னையும் இருந்ததாக எங்களிடம் கூறவில்லை. படிப்பும் நன்றாக போய் கொண்டிருந்தது. இன்னும் 2 மாதங்களில் படிப்பை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவேன் எனக் கூறியிருந்தான். இந்நிலையில்...”

Published:Updated:
எம்பிபிஎஸ் மாணவர் பிரதீப்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த குஜிலியம்பாறை அருகே உள்ள இலுப்பபட்டியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவர் குளித்தலையில் உள்ள தமிழ்நாடு அரசு வேளாண்மை துறையின் விதை சுத்திகரிப்பு நிலையத்தில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வருகிறார்.

இவரின் மகன் பிரதீப்(25), பிலிப்பைன்ஸ் நாட்டில் டாவோ நகரில் உள்ள DAVAO மெடிகல் ஸ்கூல் அண்டு பவுண்டேஷன் என்ற மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு படித்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 19 ஆம் தேதி பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து பிரதீப்பின் நண்பர் ஒருவர் போன் செய்து, பிரதீப் அவர் தங்கியிருந்த அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தந்தை கந்தசாமியிடம் தெரிவித்துள்ளார்.

தற்கொலை
தற்கொலை
சித்தரிப்புப் படம்

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கந்தசாமி மற்றும் அவரின் உறவினர்கள், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகனிடம் மாணவனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை மனு அளித்தனர். இருப்பினும் 5 நாள்களாகியும் மாணவனை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மாணவரின் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 தற்கொலை
தற்கொலை
மாதிரிப் படம்

இதுகுறித்து மாணவினரின் தந்தை கந்தசாமியிடம் பேசினோம். ``மருத்துவம் படிக்க வேண்டும் என்ற எங்கள் மகனின் ஆசையை நிறைவேற்றவே கனரா வங்கியில் கல்விக்கடன் பெற்று பிலிப்பைன்ஸ் அனுப்பினோம். எனது மகன் நன்றாக படிக்கக் கூடியவன். இதுவரை அங்கு எவ்விதப் பிரச்னையும் இருந்ததாக எங்களிடம் கூறவில்லை. படிப்பு நன்றாக போய் கொண்டிருக்கிறது. இன்னும் 2 மாதங்களில் படிப்பை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவேன் எனக் கூறியிருந்தான். இந்நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதை எங்களால் நம்ப முடியவில்லை.

தூக்கிட பயன்படுத்திய கயிறு
தூக்கிட பயன்படுத்திய கயிறு

எங்கள் மகன் தற்கொலை செய்து கொள்ள கூடியவன் இல்லை. மேலும் முகத்தில் கருப்பு துணியை மூடிக் கொண்டு தூக்கில் தொங்கியது போன்ற புகைப்படம் எங்களுக்கு அனுப்பப்பட்டது. கல்வி நிறுவனத்தின் சார்பில் நடத்தப்படும் விடுதியில் தங்கியிருந்தவர், திடீரென வெளியே அறை எடுத்து தங்கியதாகக் கூறுகிறார்கள். அவருடைய மரணத்தில் மர்மம் உள்ளது. எனவே எனது மகனின் உடலை மீட்டு, இறப்புக்கான காரணத்தை அறிய விசாரணை நடத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் எங்கள் மகன் உடலை மீட்டுக் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism