Published:Updated:

பண பேரம், குவாரியில் பெட்ரோல் குண்டு வீச்சு?... கைதான நா.த.க நிர்வாகி! - நத்தத்தில் நடந்தது என்ன?

குவாரியில் பெட்ரோல் குண்டு வீச்சு

ராஜாவின் குவாரியில் அமைக்கப்பட்டிருந்த செட், ஹிட்டாச்சி வாகனத்துக்கு சிவசங்கரனும், அவர் ஆதரவாளர்களும் தீவைத்து சேதப்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

பண பேரம், குவாரியில் பெட்ரோல் குண்டு வீச்சு?... கைதான நா.த.க நிர்வாகி! - நத்தத்தில் நடந்தது என்ன?

ராஜாவின் குவாரியில் அமைக்கப்பட்டிருந்த செட், ஹிட்டாச்சி வாகனத்துக்கு சிவசங்கரனும், அவர் ஆதரவாளர்களும் தீவைத்து சேதப்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

Published:Updated:
குவாரியில் பெட்ரோல் குண்டு வீச்சு

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் நேரு நகரைச் சேர்ந்தவர் சிவசங்கரன்(45). இவர் நாம் தமிழர் கட்சியில் மாநிலக் கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கிறார்.

சிவசங்கரன்
சிவசங்கரன்

இந்த நிலையில், நத்தம் அருகே பண்ணியாமலையில் கல்குவாரி நடத்தி வரும் ராஜா என்பவர் தனது வீட்டுக்கு வந்து கனிமவளத்தைக் கொள்ளையடிக்கும் குவாரிக்கு எதிராக செயல்படும் தன்னை கொலைசெய்யும் நோக்கோடு தாக்கியதாக போலீஸாரிடம் புகார் அளித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கைது
கைது

அதனடிப்படையில் நத்தம் போலீஸார் ராஜாவைக் கைதுசெய்தனர். இதையடுத்து ராஜாவின் குவாரியில் அமைக்கப்பட்டிருந்த செட், ஹிட்டாச்சி வாகனத்துக்கு சிவசங்கரனும், அவர் ஆதரவாளர்களும் தீவைத்து சேதப்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

இது தொடர்பாக ராஜாவின் மனைவி சரசு அளித்த புகாரின் அடிப்படையில், அண்மையில் சிவசங்கரனின் ஆதரவாளர்களான அங்குராஜ், தினகரன் உள்ளிட்ட 4 பேர்மீது வழக்கு பதிவுசெய்த போலீஸார் அவர்களைக் கைதுசெய்தனர். நாம் தமிழர் நிர்வாகி சிவசங்கரன்மீதும் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வந்தனர்.

இதற்கிடையில் நாம் தமிழர் நிர்வாகி சிவசங்கரன் தன்னை சமூக ஆர்வலர் போல காட்டிக்கொண்டு குவாரி உரிமையாளர்களை மிரட்டிப் பணம் பறித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

சிவசங்கரன்-ராஜா
சிவசங்கரன்-ராஜா

இந்த நிலையில், குவாரி உரிமையாளர் ராஜாவின் மனைவி சரசு கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவசங்கரன்மீது தாக்கியது, தீ வைத்தது என மொத்தம் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்த நத்தம் போலீஸார், அவரைக் கைதுசெய்து மதுரை மத்திய சிறையில் அடைந்திருக்கின்றனர்.