Published:Updated:

இந்தியர்களைப் பயன்படுத்தும் எத்தியோப்பிய கும்பல்... ரூ.99 கோடி ஹெராயின் கடத்தலில் சிக்கிய ஆசிரியர்!

கைது ( ட்விட்டர் )

கைதான 55 வயதான கடத்தல்காரர் முன்னாள் ஆசிரியர். தற்போது வீட்டிலேயே குழந்தைகளுக்கு டியூஷன் நடத்திவந்திருக்கிறார்.

இந்தியர்களைப் பயன்படுத்தும் எத்தியோப்பிய கும்பல்... ரூ.99 கோடி ஹெராயின் கடத்தலில் சிக்கிய ஆசிரியர்!

கைதான 55 வயதான கடத்தல்காரர் முன்னாள் ஆசிரியர். தற்போது வீட்டிலேயே குழந்தைகளுக்கு டியூஷன் நடத்திவந்திருக்கிறார்.

Published:Updated:
கைது ( ட்விட்டர் )

பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில், 99 கோடி மதிப்பிலான 14 கிலோ ஹெராயின் போதைப்பொருளை கடத்தியவரை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைதுசெய்தனர். இது தொடர்பாக வெளியான தகவலில், தெலங்கானாவைச் சேர்ந்த 55 வயதான கடத்தல்காரர், ஒரு முன்னாள் ஆசிரியர். தற்போது வீட்டிலேயே குழந்தைகளுக்கு டியூஷன் நடத்திவந்திருக்கிறார்.

போதைப்பொருள்
போதைப்பொருள்

இந்த நிலையில், வெளிநாட்டுக்குச் செல்ல விரும்புபவர்களுக்கு அழைப்பு விடுக்கும் வேலைவாய்ப்புக்கான விளம்பரத்தை ஆன்லைனில் பார்த்திருக்கிறார். மேலும், அதில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணைத் தொடர்புகொண்டபோது எத்தியோப்பியாவிலிருந்து ஒருவர் பேசியிருக்கிறார், மேலும் அவர் போதைப்பொருள்களை கடத்த ஒப்பந்தம் பேசியிருக்கிறார். அதற்கு ஆசிரியரான இவரும் சம்மதித்து எத்தியோப்பியா சென்று போதைப்பொருள்களை கடத்திவந்திருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
போதைப்பொருள்
போதைப்பொருள்

போதைப்பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் பெங்களூரு விமான நிலையத்தில் நடைபெற்ற சோதனையில் கடத்தல்காரர் கைதுசெய்யப்பட்டார். இது தொடர்பாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரி, "பொதுவாக இது போன்ற கடத்தலுக்கு ஆப்பிரிக்கர்கள் பயன்படுத்தப்படுவார்கள். தற்போது சர்வதேச அளவில் அவர்கள் மீது சந்தேகப் பார்வை வலுத்திருப்பதால், இந்தியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது, 1 கிலோ 7 கோடி மதிப்புகொண்டது. 14 கிலோ ஹெராயின் கடத்தப்பட்டு வந்தது. மொத்த சராசரி மதிப்பு ரூ.99 கோடி.

விமான நிலையம்
விமான நிலையம்

கைதுசெய்யப்பட்ட கடத்தல்காரர் இரண்டு சூட்கேஸ்களில் மறைத்து எடுத்துவந்த அந்த போதைப்பொருள், டெல்லியில் கைமாறும் எனவும், அதை வாங்கிச்செல்ல எத்தியோப்பியர் ஒருவர் வருவார் எனவும் அவரிடம் கூறப்பட்டிருக்கிறது. அதற்காக பெங்களூரிலிருந்து டெல்லிக்கு மற்றொரு விமானத்தில் கடத்தல்காரர் செல்ல திட்டமிடப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது" எனத் தெரிவித்தனர்.