Published:Updated:

திருமணமாகி 5 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை! - விரக்தியில் விபரீத முடிவெடுத்த காதல் தம்பதியர்

தற்கொலை செய்துகொண்ட தம்பதியர்
தற்கொலை செய்துகொண்ட தம்பதியர்

குழந்தை பாக்கியம் வேண்டி பல கோயில்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் சென்று வந்திருக்கிறார்கள். ஆனாலும், அவர்களுக்கு குழந்தைப்பேறு வாய்க்கவில்லை என்பதால், மனவேதனையில் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகாவைகுண்டம் (27). இவர், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிசூல்தாள் (25) என்ற பெண்ணை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து, திருமணம் செய்துகொண்டார். மகாவைகுண்டம் நாகர்கோவிலில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் வேலை செய்துவந்தார். இதனால் அவர்கள் நாகர்கோவில் கோட்டாறு பகுதியிலுள்ள பைத்துல்மால் நகரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்துவந்தனர். திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்குக் குழந்தை இல்லை எனக் கூறப்படுகிறது. எனவே, குழந்தை பாக்கியம் வேண்டி பல கோயில்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் சென்று வந்திருக்கிறார்கள். ஆனாலும், அவர்களுக்குக் குழந்தைப்பேறு வாய்க்கவில்லை என்பதால், இருவரும் மிகவும் மன வேதனையில் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது.

போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணை

இந்தநிலையில், மகா வைகுண்டமும், அவரின் மனைவியும் நேற்று காலை வெகுநேரமாகியும் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்திருக்கிறார்கள். அப்போது இருவரும் கட்டிலில் இறந்தநிலையில் சடலமாகக் கிடந்திருக்கிறார்கள். இது குறித்து கோட்டாறு காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தனர்.

நடிகை சித்ரா தற்கொலை செய்துகொள்ளும் முன் நடந்தது என்ன?- கைதான ஹேமந்த் அளித்த அதிர்ச்சித் தகவல்

கோட்டாறு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று தம்பதியரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முதற்கட்ட விசாரணையில் அவர்கள் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இந்தச் சம்பவம் குறித்து கோட்டாறு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தற்கொலை செய்துகொண்ட தம்பதியர்
தற்கொலை செய்துகொண்ட தம்பதியர்

இது குறித்து கோட்டாறு போலீஸார் கூறுகையில், ``காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியர் இறந்ததுகிடந்த கட்டிலருகே விஷ பாட்டில் கிடந்தது. எனவே, அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்க வாய்ப்பிருக்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாத காரணத்தால் அவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இருப்பினும் வேறு பிரச்னைகள் ஏதாவது இருக்கிறதா எனவும் விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு