Published:Updated:

இன்ஜினீயர் சுஜியின் வெளிநாட்டு நண்பனைப் பிடிக்க பொறி! - லேப்டாப்பில் சிக்கிய வீடியோ

சுஜி என்கிற காசி
சுஜி என்கிற காசி ( twitter )

`சிறுமிகளும் குடும்பப் பெண்கள் சிலரும் சுஜியின் வலையில் சிக்கியுள்ளனர். அவரது லேப்டாப்பை சோதித்தபோது, அதில் பல ஆதாரங்கள் சிக்கின.'

நாகர்கோவிலைச் சேர்ந்த இன்ஜினீயர் சுஜி என்ற காசி சமூக வலைதளங்கள் மூலம் பெண்களிடம் நட்பு ஏற்படுத்திவந்தான். பின்னர் பெண்களிடம் நெருக்கமாகப் பழகி அவர்களை வீடியோ எடுத்து வைத்துக்கொள்வான். பின்னர் அவர்களிடம் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடுவான். அதுபோன்று சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவரை மிரட்டி பணம் பறித்ததுடன், அவரது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பெண் மருத்துவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சுஜி கைது செய்யப்பட்டார். நாங்குநேரி சிறையில் அடைக்கப்பட்ட சுஜியின் மீது நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலையத்தில் மேலும் ஒரு பெண் புகார் அளித்தார். மேலும் கந்துவட்டிக்கு பணம் கொடுத்து அதற்குப் பதிலாக ஹார்லி டேவிட்சன் பைக்கை ஏமாற்றி வாங்கியதாக டிராவிட் என்பவர் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சுஜி மீது கந்துவட்டி வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன் அவர் பயன்படுத்தி ஹார்லி டேவிட்சன் பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சிறுமி ஒருவர் பாலியல் புகார் அளித்ததைத் தொடர்ந்து போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைவிலங்குடன் ஹர்ட் சிம்பல் காட்டும் சுஜி
கைவிலங்குடன் ஹர்ட் சிம்பல் காட்டும் சுஜி

சுஜி மீது ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நாங்குநேரி சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில் சுஜியை மூன்று நாள்கள் காவலில் எடுத்து போலீஸார் விசாரணை நடத்தியதில் பல தகவல்கள் வெளிவந்துள்ளன. அதன் அடிப்படையில் சுஜி பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த நாகர்கோவிலைச் சேர்ந்த டேசன் ஜினோ என்பவர் கைது செய்யப்பட்டார்.

மேலும், சுஜியின் மோசடிகளுக்கு உடந்தையாக இருந்த ஒருவர் சவுதி அரேபியாவில் வேலை பார்க்கிறார். அவரை கைது செய்ய போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``இன்ஜினீயர் சுஜியால் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுமிகளும் குடும்பப் பெண்கள் சிலரும் சுஜியின் வலையில் சிக்கியுள்ளனர். அவரது லேப்டாப்பை சோதித்தபோது, அதில் பல ஆதாரங்கள் சிக்கின.

சுஜி என்கிற காசி
சுஜி என்கிற காசி

சுஜிக்கு நெருக்கமான இரண்டு நண்பர்கள் அவனது மோசடிக்கு உடைந்தையாக இருந்துள்ளனர். அதில் டேசன் ஜினோ என்பவரை கைது செய்துள்ளோம். ஒருவர் சவுதி அரேபியாவில் உள்ளார். அவர் ஊருக்கு வந்ததும் கைது செய்வதற்காக விமான நிலையங்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நண்பர்கள்தான் பெண்களுக்கு போன் செய்து மிரட்டுவது, சுஜியுடன் பெண்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வலைதளங்களில் பதிவேற்றம் செய்வது போன்ற வேலைகளைச் செய்துள்ளனர்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு