Published:Updated:

பொள்ளாச்சி பாலியல் வழக்கை விஞ்சும் நாகர்கோவில் காசி வழக்கு!

நாகர்கோவில் காசி வழக்கு!
பிரீமியம் ஸ்டோரி
நாகர்கோவில் காசி வழக்கு!

ஜிம்மில், சில வி.ஐ.பி வீட்டுப் பெண்களும் காசிக்குப் பழக்கமானார்கள். அதில் கோவையில் படிக்கும் ஒரு வி.ஐ.பி வீட்டுப் பெண்ணுடன் பழக்கமாகி, அந்தப் பெண்ணுடன் சில நாள்கள் கோவையில் தங்கியுள்ளான்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கை விஞ்சும் நாகர்கோவில் காசி வழக்கு!

ஜிம்மில், சில வி.ஐ.பி வீட்டுப் பெண்களும் காசிக்குப் பழக்கமானார்கள். அதில் கோவையில் படிக்கும் ஒரு வி.ஐ.பி வீட்டுப் பெண்ணுடன் பழக்கமாகி, அந்தப் பெண்ணுடன் சில நாள்கள் கோவையில் தங்கியுள்ளான்.

Published:Updated:
நாகர்கோவில் காசி வழக்கு!
பிரீமியம் ஸ்டோரி
நாகர்கோவில் காசி வழக்கு!
பெண் மருத்துவர் ஒருவரைக் காதலிப்பதாக ஏமாற்றி அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்த வழக்கில், நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்கிற சுஜி, ஏப்ரல் 24-ம் தேதி கைதுசெய்யப்பட்டார்.

காசியின் செல்போனை சோதனை செய்த போலீஸாருக்கு அதிர்ச்சி! பொள்ளாச்சி பாலியல் வழக்கை விஞ்சும் அளவுக்கு காசியின் நெட்வொர்க் இருப்பது தெரியவந்தது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிக்கியது அரசியல் பிரமுகர்கள் என்றால், நாகர்கோவில் காசியுடன் தொடர்பில் இருந்தது பல்வேறு துறைகளைச் சார்ந்த வி.ஐ.பி-கள்.

பெண்களை ஏமாற்றி பாலியல் மோசடி செய்ததாக நான்கு வழக்குகள், போஸ்கோ வழக்கு, கந்துவட்டி வழக்கு என, மொத்தம் ஆறு வழக்குகள் காசி மீது பதிவுசெய்யப்பட்டுள்ளன. பெண்களின் புகைப்படங்கள், வீடியோக்களை இணையதளத்தில் வெளியிடும் காசியின் நண்பன் டேசன் ஜினோ என்பவர் கைதுசெய்யப்பட்டுள் ளார். மேலும், சவுதி அரேபியாவில் இருக்கும் காசியின் மற்றொரு நண்பரை கைதுசெய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காசியைப் பற்றி நன்கு அறிந்தவர்களிடம் பேசினோம். ‘‘பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே பெண்கள் விஷயத்தில் காசி மோசமானவன். ஆரம்பத்தில் அவனது தெருவைச் சேர்ந்த இரண்டு பெண்களை ஏமாற்றிய விஷயம் வெளியில் தெரிந்து, அவனை செருப்பால் அடித்து எச்சரித்துள்ளனர். ஆனாலும் அவன் திருந்தவில்லை. 2013-ம் ஆண்டுவாக்கில் ஒரு போலீஸ் அதிகாரியின் மகளையே ஏமாற்றினான். ஆனால், போலீஸ் அதிகாரிகள் சிலரே அப்போது காசிக்கு சப்போர்ட் செய்ததால் அதிலிருந்து தப்பிவிட்டான். அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால், இவ்வளவு பெண்கள் ஏமாந்திருக்க மாட்டார்கள்” என்றனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கை விஞ்சும் நாகர்கோவில் காசி வழக்கு!

‘‘கல்லூரியில் அவனது நட்பு அதிகரித்தது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என வலைதளங்கள் மூலம் பெண்களை வலையில் வீழ்த்த ஆரம்பித்தான். பணக்காரன் என்றால், பெண்கள் எளிதாக வீழ்ந்துவிடுவார்கள் என கணக்குப்போட்டு, தன்னை பெரிய தொழிலதிபரைப்போல் காட்டிக் கொண்டான். வி.ஐ.பி-கள் செல்லும் ஜிம்முக்குச் சென்று வி.ஐ.பி-களுடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டான். பிறகு, அவர்களுடைய விலை உயர்ந்த காருடன் செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்கில் போடுவது, கட்டுக்கட்டாகப் பணத்தை அடுக்கி வைத்துக்கொண்டு புகைப்படம் பகிர்வது, ஏழைகளுக்கு உதவி செய்வதுபோன்ற புகைப்படங்களைப் பதிவிடுவது எனத் திட்டமிட்டு ஒரு இமேஜை உருவாக்கிக் கொண்டான்.

ஜிம்மில், சில வி.ஐ.பி வீட்டுப் பெண்களும் காசிக்குப் பழக்கமானார்கள். அதில் கோவையில் படிக்கும் ஒரு வி.ஐ.பி வீட்டுப் பெண்ணுடன் பழக்கமாகி, அந்தப் பெண்ணுடன் சில நாள்கள் கோவையில் தங்கியுள்ளான்.

கல்லூரி மாணவிகளை மட்டுமல்ல, திருமணமான பெண்களையும் அவன் விட்டுவைக்கவில்லை. பெண்களுடன் தனிமையில் இருக்கும் போது வீடியோ, போட்டோ எடுத்து வைத்துக்கொள்வான். அவனது உறவுக்காரப் பெண்கள் சிலரையே அப்படி போட்டோ எடுத்து வைத்துள்ளான். பிறகு, ஏதாவது காரணத்தைச் சொல்லி பணம் கறப்பான். அவன் கேட்கும்போது பணம் கொடுக்க வில்லையெனில், ‘உன் போட்டோக்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விடுவேன்’ என மிரட்டி பணம் பறிப்பான். இப்படி காசியிடம் பல பெண்கள் தங்களது நகைகளையும் பணத்தையும் இழந்துள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கை விஞ்சும் நாகர்கோவில் காசி வழக்கு!
பொள்ளாச்சி பாலியல் வழக்கை விஞ்சும் நாகர்கோவில் காசி வழக்கு!

என்றாவது ஒரு நாள் சிக்குவோம் என்பது தெரிந்துதான், பாதுகாப்புக்காக வக்கீலுக்குப் படிக்கலாம் என முடிவுசெய்து சென்னையில் ஒரு சட்டக் கல்லூரியில் சேர்ந்திருக்கிறான். காசியுடன் சில வி.ஐ.பி-களின் மகன்களுக்கும் தொடர்பு இருக்கிறது. காசி ஏமாற்றிய லிஸ்டில் வி.ஐ.பி வீட்டுப் பெண்கள் சிலரும் உள்ளனர். ஆகையால், காசி வழக்கால் தங்கள் பெயருக்கு களங்கம் வந்துவிடக் கூடாது என்றெண்ணி, சில வி.ஐ.பி-கள் மேல்மட்டத்தில் அணைபோடுவதால், காசி வழக்கில் ஆரம்பத்தில் இருந்த வேகம் இப்போது இல்லை’’ என்கிறார்கள்.

காசி வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என, தொடர் போராட்டம் நடத்தும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான லீமாரோஸிடம் பேசினோம். ‘‘காசி வழக்கில் பல பிரபலங்களுக்கும் தொடர்புள்ளது. அவர்களிடம் போலீஸ் விசாரணை நடத்தவில்லை. போலீஸ் விசாரணையில் திருப்தியில்லை என்பதால் இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என, தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்திவருகிறோம்’’ என்றார்.

லீமாரோஸ் - ஜவகர்
லீமாரோஸ் - ஜவகர்

இந்த வழக்கை விசாரித்துவரும் நாகர்கோவில் ஏ.எஸ்.பி-யான ஜவகரிடம் பேசினோம். ‘‘காசியிடம் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் ஏமாந்திருப்பது தெரியவந்துள்ளது. திருமணமான ஒருசில பெண்களும் ஏமாந்துள்ளனர். அவர்கள் அனைவரும் காசியை மட்டும்தான் சொல்கிறார்கள். பெண்களை பிளாக்மெயில் செய்தது காசியின் இரண்டு நண்பர்கள். முழுவதுமாக விசாரணை நடத்தியதில், இந்த மூன்று பேர் மட்டும்தான் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளனர். வழக்கு முன்புபோல் வேகமாக இல்லை என்பது தவறான தகவல். காசியின் லேப்டாப்பை சென்னையில் ஃபாரன்சிக் துறைக்கு அனுப்பியிருக்கிறோம். அந்த ரிப்போர்ட்டுக்காகக் காத்திருக்கிறோம்’’ என்றார்.