Published:Updated:

`பேசாமல் தவிர்த்த காதலி.. திருமண ஏற்பாடு!' -குவைத் நர்ஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நாகர்கோவில் காதலன்

கைது செய்யப்பட்ட மர்பின் தனேஷ்
கைது செய்யப்பட்ட மர்பின் தனேஷ்

அந்தப் பெண் குவைத் செல்வதற்கு மர்பின் தனேஷும் உதவிசெய்திருக்கிறார். அதன்பிறகு இருவரும் வாட்ஸ்அப் மூலம் பேசிவந்துள்ளனர். இந்த நிலையில், தனேஷிடம் பேசுவதை அந்தப் பெண் குறைத்து வந்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே ஒசரவிளை பகுதியைச் சேர்ந்த 45 வயதான பெண் ஒருவர் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அந்தப் புகாரில், அழகியபாண்டிபுரம் காட்டுப்புதூரைச் சேர்ந்த மர்பின் தனேஷ்(26) என்பவர் தன் 26 வயதான மகளை திருமணம் செய்வதாக ஆசைகாட்டி அவருடன் நெருங்கிப் பழகியுள்ளார். அப்போது அவர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்திருக்கிறார். இப்போது மகள் குவைத்தில் நர்ஸாகப் பணிபுரிந்துவரும் நிலையில் அவருடன் இருந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்புவதாகவும் வீடியோக்களை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டுவதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் புகார் குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து மர்பின் தனேஷை கைது செய்துள்ளனர். போலீஸ் விசாரணையில் இந்தச் சம்பவம் குறித்து வேறுசில தகவல்களும் வெளிவந்துள்ளன.

`குடிக்கு அடிமை; பேசுவதை நிறுத்திய காதலி!' -காலதாமதத்தால் போலீஸ் பூத்தில் குண்டுவீசிய காதலன்

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ``புகார் அளித்த பெண் கணவனைப் பிரிந்து இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். அவரின் மூத்த மகள் பி.எஸ்ஸி படித்துவிட்டு 2018-ம் ஆண்டுவாக்கில் நாகர்கோவிலில் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்ஸாகப் பணிபுரிந்து வந்திருக்கிறார். அந்தச் சமயத்தில் மர்பின் தனேஷுக்கும் அந்தப் பெண்ணுக்கும் முகநூல் வழியாக காதல் ஏற்பட்டுள்ளது. மர்பின் தனேஷ் அந்தப் பெண்ணுக்கு உறவினர் என்கிறார்கள். இதனால் அந்தப் பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் கூறுகிறார்கள். அவர்கள் காதலித்த சமயத்தில் பல புகைப்படங்களை எடுத்துள்ளனர். இதற்கிடையில், அந்தப் பெண்ணுக்கு குவைத்தில் நர்ஸ் பணி கிடைத்திருக்கிறது.

அந்தப் பெண் குவைத் செல்வதற்கு மர்பின் தனேஷும் உதவிசெய்திருக்கிறார். அதன்பிறகு இருவரும் வாட்ஸ்அப் மூலம் பேசிவந்துள்ளனர். இந்த நிலையில், தனேஷிடம் பேசுவதை அந்தப் பெண் குறைத்து வந்துள்ளார். இதை உணர்ந்த மர்பின் தனேஷ், அதுபற்றி விசாரித்தபோது அந்தப் பெண்ணுக்கும் அருமனை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்தவர், அந்தப் பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை அருமனையைச் சேர்ந்த இளைஞருக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும், அந்தப் பெண்ணைக் காதலித்தது குறித்தும் அந்த இளைஞரிடம் கூறியிருக்கிறார்.

தனிமைப்படுத்தாத பெண் அதிகாரி; திருமணத்துக்கு வந்த மணமகன்! - கோவையில் மீண்டும் கொரோனா

அத்துடன் நிற்காமல் தனது காதலியாக இருந்தவருக்கும் சில புகைப்படங்களை அனுப்பி, என்னைத் திருமணம் செய்யாமல் ஏமாற்றினால் இந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் எனவும் கூறியிருக்கிறார். மேலும், நர்ஸின் அம்மாவிடம் சென்று மகளை திருமணம் செய்துவைக்கும்படி கேட்டு பிரச்னை செய்திருக்கிறார். இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு