Published:Updated:

நாமக்கல்: குடும்பத் தகராறு; கொதிக்கும் எண்ணெயைக் கணவன் தலையில் ஊற்றிய மனைவி!

கொலை
கொலை

தனது கணவரின் கொடுமையைத் தாங்க முடியாத செல்வராணி, பலகாரம் செய்ய அடுப்பில் கொதிக்கவைத்துக்கொண்டிருந்த எண்ணெயைச் சட்டியோடு தூக்கி, தங்கராஜ் மீது ஊற்றியதாகச் சொல்லப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

குடும்பத் தகராறு காரணமாக, நாமக்கல்லைச் சேர்ந்த பெண் ஒருவர் கோபத்தில், கொதிக்கும் எண்ணெயைத் தனது கணவர் தலையில் ஊற்றிக் கொலை செய்திருக்கும் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கொலை
கொலை

நாமக்கல், ஏ.எஸ்.பேட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (50). இவரின் மனைவி செல்வராணி (45). இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். டெய்லராக இருக்கும் தங்கராஜ், தான் சம்பாதிக்கும் சொற்ப வருமானத்தையும் மது அருந்தப் பயன்படுத்துவாராம். அதோடு, தினமும் மது அருந்திவிட்டு வந்து, செல்வராணியை அடித்துக் கொடுமைப்படுத்திவந்ததாகச் சொல்லப்படுகிறது.

வேலூர்: கொலை வழக்கில் தொடர்பு! -குண்டர் தடுப்புச் சட்டத்தில் இளைஞர் சிறையிலடைப்பு

இதனால், குடும்ப வருமானத்துக்காக செல்வராணி, சாலையில் பலகாரக் கடை நடத்திவந்திருக்கிறார். கணவர் கொடுமைப்படுத்துவதால், இந்தத் தம்பதிக்குள் தினமும் சண்டை நடப்பது வாடிக்கை என்கிறார்கள். இந்தநிலையில், சில தினங்களுக்கு முன்பு, வழக்கம்போல இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டிருக்கிறது. செல்வராணியை தங்கராஜ் அடிக்கவும் செய்தாராம். இதனால், தனது கணவரின் கொடுமையைத் தாங்க முடியாத செல்வராணி, பலகாரம் செய்ய அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்த எண்ணெயைச் சட்டியோடு தூக்கி, தங்கராஜ் மீது ஊற்றியதாகச் சொல்லப்படுகிறது. இதனால், சூடுதாங்காமல் வலியால் துடித்த தங்கராஜை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

கைது
கைது
representational image

அவருக்கு, அங்கே தொடர் சிகிச்சை வழங்கப்பட்டுவந்தது. இந்தநிலையில், சிகிச்சை பலனிக்காமல் தங்கராஜ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து வந்த புகாரைத் தொடர்ந்து, நாமக்கல் காவல் நிலைய போலீஸார், வழக்கு பதிவு செய்து, செல்வராணியைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். குடும்பத் தகராறில் தன் கணவர்மீது பெண் ஒருவர் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிக் கொலை செய்த சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு