Published:Updated:

நாமக்கல்: 3 ஆண்டுகள்; ரூ. 60 லட்சம் மதிப்பு! - திருடுபோன 301 செல்போன்களை மீட்ட போலீஸ்

செல்போன்களை ஒப்படைக்கும் எஸ்.பி
செல்போன்களை ஒப்படைக்கும் எஸ்.பி

செல்போன்களை உரிய நபர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது. மீட்கப்பட்ட செல்போன்களை பார்வையிட்ட நாமக்கல் மாவட்ட எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் உரிய நபர்களிடம் வழங்கினார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடந்த மூன்று ஆண்டுகளில் தொலைந்துபோன, ரூ. 60 லட்சம் மதிப்பிலான 301 செல்போன்களை தனிப்படை அமைத்து மீட்டு, அவற்றை உரியவர்களிடம் நாமக்கல் மாவட்ட எஸ்.பி வழங்க நடவடிக்கை எடுத்த முயற்சி, நாமக்கல் மாவட்ட மக்களைப் பாராட்டவைத்திருக்கிறது.

மீட்கப்பட்ட செல்போன்கள்
மீட்கப்பட்ட செல்போன்கள்
`திருடச் சென்றபோது எழுந்துவிட்டார்!’ - 92 வயது மூதாட்டியை, குழவிக்கல்லைப் போட்டுக் கொன்ற இளைஞர்

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை தொலைந்துபோன செல்போன்களைக் கண்டுபிடித்து தரக் கோரி, 585 பேர் நாமக்கல் மாவட்ட போலீஸ் நிலையங்கள், சைபர் க்ரைம் என்று பல இடங்களில் புகார் செய்துள்ளனர். அதோடு, தொடர்ந்து மக்களிடம் செல்போன்கள் திருடுபோவது வாடிக்கையாகத் தொடரவும் செய்தது. இதைத் தடுக்கவும், ஏற்கெனவே தொலைந்துபோன செல்போன்களைக் கண்டுபிடிக்கவும், நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டார். அதற்காக, சைபர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செல்லபாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தத் தனிப்படையினர், மாவட்டம் முழுவதும் இது குறித்து சோதனை நடத்தினர். அந்த வகையில், இதுவரை 301 செல்போன்களை மீட்டுள்ளனர். அவற்றை உரிய நபர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது. மீட்கப்பட்ட செல்போன்களைப் பார்வையிட்ட நாமக்கல் மாவட்ட எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் உரிய நபர்களிடம் வழங்கினார்.

மீட்கப்பட்ட செல்போன்கள்
மீட்கப்பட்ட செல்போன்கள்

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுக்காலத்தில் 585 செல்போன்கள் தொலைந்திருப்பதாகப் புகார்கள் வரப்பெற்றுள்ளன. இவற்றில், சுமார் ரூ.60 லட்சம் மதிப்பிலான 301 செல்போன்கள் மீட்கப்பட்டு, உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 284 செல்போன்களையும் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. பொதுமக்கள் தங்கள் செல்போன், பணம் சம்பந்தமாக சைபர் குற்றங்கள் நடைபெறும்போது, உடனடியாக தேசிய உதவி மைய எண்ணான 155260 என்ற எண்ணையும், குழந்தைத் திருமணம் சம்பந்தமான புகார்களுக்கு 1098 என்ற எண்ணையும், பெண்கள் சம்பந்தமான புகார்களுக்கு 181 என்ற எண்ணையும் தொடர்புகொள்ள வேண்டும். பணத்தை இரட்டிப்புச் செய்துதருவதாக யாராவது கூறினால், ஏமாறக் கூடாது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு