Published:Updated:

நாமக்கல்: ஷட்டரை உடைத்து பணத்தைத் திருடும் கும்பலின் தொடர் கைவரிசை - அதிரவைத்த சிசிடிவி காட்சிகள்

திருட்டு

நாமக்கல்லிலுள்ள கடைகளின் ஷட்டரை உடைத்து பணத்தைத் திருடும் வடமாநிலக் கும்பலின் செயல்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கின்றன.

நாமக்கல்: ஷட்டரை உடைத்து பணத்தைத் திருடும் கும்பலின் தொடர் கைவரிசை - அதிரவைத்த சிசிடிவி காட்சிகள்

நாமக்கல்லிலுள்ள கடைகளின் ஷட்டரை உடைத்து பணத்தைத் திருடும் வடமாநிலக் கும்பலின் செயல்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கின்றன.

Published:Updated:
திருட்டு

நாமக்கல் நகரிலுள்ள பலபட்டறை மாரியம்மன் கோயில் அருகே சிவா என்பவர் டி.வி., வாஷிங்மெஷின், ஃபிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யும் கடை நடத்திவருகிறார். இந்த நிலையில், நள்ளிரவில் இவரின் கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், சிவா கல்லாபெட்டியில் இருந்த ரூ.15,000-த்தை திருடிச் சென்றனர். மறுநாள் கடைக்கு வந்த சிவா, தனது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு, கல்லாவிலிருந்த பணம் திருட்டுப்போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இது தொடர்பாக அவர் நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், நாமக்கல் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அந்த சிசிடிவி காட்சிகளில் நள்ளிரவில் கடையின் ஷட்டரை உடைத்து ஒருவர் கடைக்குள் வந்து, பணத்தைத் திருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அந்தப் பதிவுகளைவைத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். வடமாநில கும்பல் இதேபோல், கடந்த சில நாள்களுக்கு முன்பு நாமக்கல்லில் சேலம் சாலையிலுள்ள செல்போன் ஷோரூமில் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்து சுமார் ரூ.50,000 த்தைத் திருடிச் சென்றது.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேலும், இதே பாணியில் நாமக்கல் டு பரமத்தி சாலையிலுள்ள ரெடிமேட் கடையில் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்த நபர்கள் ரூ.53,000-ஐ திருடிச் சென்றனர். இப்படி, ஒரே பாணியில் தொடர்ச்சியாக ஷட்டரை உடைத்துத் திருடும் மர்ம கும்பல் குறித்து போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், இந்த மூன்று சம்பவங்களிலும் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்திருக்கிறது. ஒருவர் உள்ளே சென்று பணத்தைத் திருடுவதும், மற்றொருவர் வெளியில் காவலுக்கு நிற்பதும் வாடிக்கையாக இருந்துவருகிறது. இது போன்று, தொடர்ந்து திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றுவருவதால், வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

'போலீஸார் இரவு நேர ரோந்தை அதிகப்படுத்த வேண்டும்' எனவும் கோரிக்கை விடுத்துவருகின்றனர். நாமக்கல்லிலுள்ள கடைகளில் தொடர்ச்சியாக மர்ம கும்பல் ஒன்று ஷட்டரை உடைத்து, திருடும் சம்பவங்கள் அதிகரித்துவருவது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.