Published:Updated:

மிளகாய்பொடி தூவி, கடத்தப்பட்ட தொழிலதிபர்; 2 நாள்கள் கழித்து சடலமாக மீட்பு - நாமக்கல்லில் அதிர்ச்சி

கொலை செய்யப்பட்ட கௌதம் நாமக்கல்

இரண்டு நாள்களுக்கு முன்பு கடத்தப்பட்ட நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மிளகாய்பொடி தூவி, கடத்தப்பட்ட தொழிலதிபர்; 2 நாள்கள் கழித்து சடலமாக மீட்பு - நாமக்கல்லில் அதிர்ச்சி

இரண்டு நாள்களுக்கு முன்பு கடத்தப்பட்ட நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
கொலை செய்யப்பட்ட கௌதம் நாமக்கல்

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகேயுள்ள வெப்படை பாதரை செட்டுக்காரன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கௌதம் (36). இவருக்கு திவ்யபாரதி (29) என்ற மனைவி இருக்கிறார். கௌதம் வெப்படையில் நிதி நிறுவனம் நடத்திவருகிறார். அதோடு, கௌதம் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பள்ளிப்பாளையம் வடக்கு ஒன்றிய இளைஞரணி தலைவராகவும் இருக்கிறார். இதனால், அந்தப் பகுதியில் கௌதம் பலராலும் நன்கு அறியப்படும் நபராக இருந்தார்.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு இரவு நேரத்தில், கௌதம் தனது நிதி நிறுவனத்தைப் பூட்டிவிட்டு பாதரையில் உள்ள தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் அருகே இருட்டான பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர், கௌதம் கண்களில் மிளகாய்பொடியைத் தூவி, தாங்கள் வந்த காரில் அவரைக் கடத்திச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த கௌதமின் உறவினர்கள், கௌதம் கடத்தப்பட்டது குறித்து, பள்ளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இது குறித்து, வழக்கு பதிவுசெய்த பள்ளிப்பாளையம் காவல் நிலைய போலீஸார், சிசிடிவி காட்சிகளைவைத்து தீவிர விசாரணையைத் தொடங்கினர். அதோடு, கௌதமைக் கடத்திய கும்பலைப் பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடுதல் பணியை முடுக்கிவிட்டனர்.

 கொலை!
கொலை!

கௌதமைக் கடத்திய நேரத்தில் செல்போன் கோபுரத்திலிருந்து வெளியான செல்போன் அழைப்பு உள்ளிட்ட விவரங்கள் குறித்து, சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனங்களிடம் கேட்டறிந்தனர். அதைக்கொண்டு, கௌதமைக் கடத்திய கும்பலை போலீஸார் தீவிரமாகத் தேடும் முயற்சியில் இறங்கினர். இந்நிலையில், கடத்தப்பட்ட கௌதம், சேலம் அருகே சடலமாக மீட்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சங்ககிரி அருகேயுள்ள வைகுந்தம் ஏரிக்கரையில் கத்திக் குத்துக் காயங்களுடன் கிடந்த சடலத்தை மீட்டு, பள்ளிப்பாளையம் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில், கௌதமைக் கடத்தி கொலை செய்த கொலையாளிகளைக் கைதுசெய்ய வலியுறுத்தி வெப்படை பகுதியில் கடைகளை அடைத்துப் பேராட்டம் நடத்திவருகின்றனர். மறுபக்கம், கட்சிரீதியான பகையில் ஏற்பட்ட கொலையா, நிதி நிறுவனம் நடத்தி வந்ததால், கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் நடந்த கொலையா அல்லது வேறு ஏதும் காரணமா என்று பல கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி குற்றவாளிகளைப் பிடிக்க தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.