Published:Updated:

நாமக்கல்: காரில் இறந்துகிடந்த ரியல் எஸ்டேட் அதிபர் - கொலையாளியைப் பிடிக்க தீவிரம் காட்டும் தனிப்படை

கொலை

நாமக்கல்லைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் காரில் மதுபோதையில் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு இறந்துகிடந்த சம்பவத்தில், கொலையாளியைப் பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்துள்ளனர்.

நாமக்கல்: காரில் இறந்துகிடந்த ரியல் எஸ்டேட் அதிபர் - கொலையாளியைப் பிடிக்க தீவிரம் காட்டும் தனிப்படை

நாமக்கல்லைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் காரில் மதுபோதையில் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு இறந்துகிடந்த சம்பவத்தில், கொலையாளியைப் பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்துள்ளனர்.

Published:Updated:
கொலை

நாமக்கல் நகரில், திருச்சி சாலையிலுள்ள ஜெய்நகரைச் சேர்ந்தவர் குமரேசன் (48). இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தார். இந்த நிலையில், இவர் கடந்த 18-ம் தேதி இரவு சேந்தமங்கலம் சாலையிலுள்ள டாஸ்மாக் மதுபான பாரில் நண்பர்களுடன் மது குடித்துவிட்டு, நள்ளிரவு வீடு திரும்பியதாகச் சொல்லப்படுகிறது. நாமக்கல் டு திருச்சி சாலையில் உள்ள பழைய நீதிமன்றக் கட்டடம் அருகே அவர் கார் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அங்கு வந்த மர்ம நபர் குமரேசனின் கழுத்தில் கத்தியால் குத்தியிருக்கிறார். குமரேசனின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி குமரேசன் இறந்துவிட்டார். இந்தக் கொலைச் சம்பவம் குறித்து அவரின் மனைவி துர்கா நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

கொலை
கொலை

அதன்பேரில், காவல் ஆய்வாளர் சங்கர பாண்டியன் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தார். இதற்கிடையே, இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக குற்றவாளியைக் கைதுசெய்ய, நாமக்கல் மாவட்ட எஸ்.பி சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின்பேரில், நாமக்கல் டி.எஸ்.பி சுரேஷ் மேற்பார்வையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தனிப்படையினர் அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர். அதில், கொலையாளி அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அவரை நெருங்கியுள்ள தனிப்படையினர், `விரைவில் கொலையாளி கைதுசெய்யப்படுவார்’ எனத் தெரிவித்தனர்.

கொலையாளி கைதுசெய்யப்பட்டால் மட்டுமே கொலைக்கான காரணம் தெரியவரும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!