Published:Updated:

நாமக்கல்: சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசப்பட்ட பெண்! - தீவிர விசாரணையில் போலீஸார்

கொலை
News
கொலை

நாமக்கல்லில் பெண்ணைக் கொலைசெய்து, உடலை சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசிய மர்மநபர்களை, போலீஸார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

நாமக்கல் நகரிலுள்ள ரோஜா நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர், அதே பகுதியில் மளிகைக் கடை நடத்திவருகிறார். இவருக்குச் சொந்தமான கிணறு சாலையோரம் உள்ளது. இந்தக் கிணற்றில் அழுகிய நிலையில் பெண் ஒருவர் பிணமாக மிதப்பதாகவும், அவரின் உடலின் ஒரு பகுதி சாக்குமூட்டையில் கட்டி இருப்பதாகவும் அங்குள்ள மக்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதனால், இந்தத் தகவலை நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கும் கொடுத்துள்ளனர். இதையடுத்து, நாமக்கல் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேஸ்வரன் தலைமையில் விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர், கிணற்றில் மிதந்த அந்தப் பெண்ணின் உடலை மீட்டு, நாமக்கல் காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையிலான போலீஸார் அங்கு வந்தனர்.

நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
நா.ராஜமுருகன்

அதோடு, அந்தப் பெண்ணின் உடலைப் பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். பின்னர், அந்தப் பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதற்கிடையில், கிணற்றில் பிணமாக மிதந்த பெண் யார் என்ற விவரம் போலீஸாருக்குக் கிடைக்கவில்லை. அங்குள்ள மக்களுக்கும் தெரியவில்லை. இதனால், அந்தப் பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து நாமக்கல் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து, தொடர் விசாரணை நடத்திவருகின்றனர். அந்தப் பெண்ணைக் கொலை செய்து சாக்கு மூட்டையில் உடலைக் கட்டி கிணற்றில் வீசிச் சென்றிருக்கலாம் என்று வழக்கு பதிந்து போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் மிதந்த சம்பவம், அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz