Published:Updated:

நாமக்கல்: காவிரியில் நீந்திய நண்பர்கள்; ஒருவர் மர்ம மரணம்! - சந்தேகம் கிளப்பும் உறவினர்கள்?

பரமத்தி வேலூர்
பரமத்தி வேலூர் ( நா.ராஜமுருகன் )

பாலசுப்ரமணியம் காவிரியாற்றில் நீந்தி எதிர்க்கரைக்குச் சென்றபோது, அவருக்குப் பின்னால் நீந்திவந்த கவின்குமாரைக் காணாததால் வேலையை முடித்துவிட்டு, இரவு ஜேடர்பாளையம் காவல் நிலையத்தில், `கவின்குமாரைக் காணவில்லை' எனப் புகாரளித்தார்.

ஜேடர்பாளையம் அருகே காவிரியாற்றில் நீந்தி வேலைக்குச் சென்று மாயமான கூலித் தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டது குறித்து, அவரின் உறவினர்கள் சந்தேகம் கிளப்புகின்றனர்.

பரமத்தி வேலூர்
பரமத்தி வேலூர்
நா.ராஜமுருகன்
கரூர்: பறிபோன ஆசிரியர் வேலை; அதிக மன உளைச்சல்! - பெற்ற தாயைக் கொலை செய்த பி.ஹெச்டி படித்த மகன்

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர், ஜேடர்பாளையம் அருகே இருக்கும் சரளைமேடு பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (வயது 37). இவரும், ஜேடர்பாளையத்தைச் சேர்ந்த கவின்குமார் (வயது 28) இருவரும் ஈரோடு மாவட்டம், ஊஞ்சலூர் பகுதிக்கு கட்டட வேலைக்குச் சென்று வந்துள்ளனர். இதற்காக, தினமும் ஜேடர்பாளையம் அருகேயுள்ள வடகரையாத்தூர் பகுதியிலுள்ள காவிரியாற்றில் நீந்தி வேலைக்குச் சென்றுவந்ததாகச் சொல்லப்படுகிறது.

கவின்குமாரும் பாலசுப்ரமணியமும் கட்டட வேலைக்குச் செல்வதற்காக, காவிரியாற்றில் நீந்திச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. இதில், பாலசுப்ரமணியம் காவிரியாற்றில் நீந்தி எதிர்க்கரையான ஈரோடு மாவட்டம், ஊஞ்சலூர் பகுதிக்குச் சென்றபோது, அவருக்குப் பின்னால் நீந்தி வந்த கவின்குமாரை காணாததால் வேலையை முடித்துவிட்டு, இரவு ஜேடர்பாளையம் காவல் நிலையத்தில், 'கவின்குமாரைக் காணவில்லை' என பாலசுப்ரமணியம் புகாரளித்தார். அதன்படி, ஜேடர்பாளையம் காவல் நிலைய போலீஸார், திருச்செங்கோடு தீயணைப்புத்துறையினர் மற்றும் மீனவர்கள் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

கவின்குமார்
கவின்குமார்
நா.ராஜமுருகன்

இந்தநிலையில், பொத்தனூர் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியதாக வந்த தகவல் அடிப்படையில் பொத்தனூர் காவிரியாற்றுக்கு, பரமத்தி வேலூர் காவல் நிலைய போலீஸார் அந்தச் சடலத்தைக் கைப்பற்றி, பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையிலுள்ள சவக்கிடங்கில் வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணையின்போது, அது ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட கவின்குமாரின் உடல் என்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் ஜேடர்பாளையம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். ஆனால், ஜேடர்பாளையம் காவல் நிலைய போலீஸாரிடம் கவின்குமாரின் உறவினர்கள், 'கவின்குமாருக்கும் பாலசுப்பிரமணிக்கும் முன்விரோதம் இருந்ததாகவும், இதனால் கவின்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விசாரணையின் முடிவில் உண்மை என்னவென்பது தெரியவரும்!

86 நாட்களில் 10,000 பேர் மரணம்! - கேரளத்தில் தொடரும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு
அடுத்த கட்டுரைக்கு