Published:Updated:

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு வினாக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்ட பெண்! - கைதுசெய்த போலீஸ்

கைது
News
கைது

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் வினாத்தாளை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாகக் கூறி, நாமக்கல்லைச் சேர்ந்த இளம்பெண்ணை சைபர் க்ரைம் போலீஸார் கைதுசெய்திருக்கும் சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அரசுத்துறையில் பணி கிடைக்க வேண்டும் என்பது இங்கே பலருக்கும் பெருங்கனவாக இருக்கிறது. பலமுறை முயன்றும் லட்சக்கணக்கானவர்களுக்கு அது எட்டாக்கனியாகவே இருக்கிறது. இருந்தாலும், பலரும் விடாப்பிடியாக அரசுப் பணிக்கு நம்பிக்கையாகத் தொடர்ந்து தேர்வு எழுதிவருகின்றனர். அப்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக இருக்கும் இடங்களுக்காகவைக்கப்பட்ட தேர்வு சம்பந்தப்பட்ட வினாத்தாள்களிலிருந்த கேள்விகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாக நாமக்கல்லைச் சேர்ந்த இளம்பெண் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். தமிழகத்திலிருக்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக இருக்கும் 1,060 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது.

கடந்த ஆண்டே நடத்தப்படவிருந்த இந்தத் தேர்வு, கொரோனா தொற்றுப் பரவல் காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, கொரோனாவின் தாக்கம் குறைந்திருக்கும் நிலையில், தள்ளிவைக்கப்பட்டிருந்த இந்தத் தேர்வு மீண்டும் கடந்த 8-ம் தேதி நடத்தப்பட்டது. கணினி வழியாக நடத்தப்பட்ட இந்தத் தேர்வில் வினாத்தாள் கையில் வழங்கப்படாது. ஆன்லைன் மூலமே கேள்விகள் வரும். இந்த நிலையில், ஆங்கிலப் பாடப்பிரிவு தேர்வுக்கான வினாத்தாள் ஒரு வெள்ளைத்தாளில் எழுதப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியானது.

நாமக்கல்
நாமக்கல்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது தொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய விசாரணையில், நாமக்கல்லைச் சேர்ந்த 27 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் தேர்வு முடிந்த பிறகு, வினாக்களை வெள்ளைத்தாளில் எழுதித் தேர்வு விதிமுறைகளை மீறி அதை வெளியே கொண்டு வந்து, சமூக வலைதளங்களில் பரப்பியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த இளம்பெண்ணை வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதத் தடை விதித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டது. இதற்கிடையே, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நம்பகத்தன்மையைச் சீர்குலைக்கும் வகையில் அந்தப் பெண் செயல்பட்டதாகக் கூறி, அவர்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் தேர்வு வாரியம் பரிந்துரை செய்தது. அதன்படி, அந்தப் பெண் மீது நாமக்கல் மாவட்ட சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து நேற்று பூர்ணிமா தேவியைக் கைதுசெய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.