Published:Updated:

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு: தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விசாரணையில் நடந்தது என்ன?

மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக விசாரணை

வீட்டிலிருந்த பணத்தைக் காணவில்லை என்று பேத்தியின் கன்னம் மற்றும் கையில் அவரின் சித்தி சூடு வைத்துள்ளார். கையில் கற்பூரத்தை ஏற்றியும் கொடுமை செய்துள்ளார் என ஆணையத்திடம் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் தாத்தா, பாட்டி தெரிவித்துள்ளனராம்.

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு: தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விசாரணையில் நடந்தது என்ன?

வீட்டிலிருந்த பணத்தைக் காணவில்லை என்று பேத்தியின் கன்னம் மற்றும் கையில் அவரின் சித்தி சூடு வைத்துள்ளார். கையில் கற்பூரத்தை ஏற்றியும் கொடுமை செய்துள்ளார் என ஆணையத்திடம் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் தாத்தா, பாட்டி தெரிவித்துள்ளனராம்.

Published:Updated:
மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக விசாரணை

பள்ளி மாணவி தற்கொலை குறித்த விவகாரம் தொடர்பாக தஞ்சாவூர் மற்றும் அரியலூரில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் உயிரிழந்த மாணவியின் தாய் வழி தாத்தா, பாட்டி `எங்கள் பேத்தியை அவளின் சித்தி சூடு வைத்து கொடுமை செய்தார்’ எனத் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை
குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், தஞ்சாவூர் மாவட்டம், மைக்கேல்பட்டி கிராமத்திலுள்ள துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் ஹாஸ்டலில் தங்கியபடி பன்னிரண்டாம் வகுப்பு படித்துவந்தார். விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற அந்த மாணவி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 19-ம் தேதி உயிரிழந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தன்னை கிறிஸ்துவ மதத்துக்கு மாறுமாறு விடுதி வார்டன் கட்டாயப்படுத்தியதாக மாணவி பேசிய வீடியோ, கடந்த 20-ம் தேதி சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்வலைகளை உண்டாக்கியது. இது தொடர்பாக திருக்காட்டுள்ளி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதுடன், விடுதி வார்டனான சகாயமேரி என்பவரையும் கைதுசெய்தனர். தொடர்ந்து அதிக வேலை வாங்கியதால் என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் பூச்சி மருந்து குடித்ததாக மாணவி பேசிய இரண்டாவது வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்கொலை செய்துகொண்ட மாணவி படித்த பள்ளி
தற்கொலை செய்துகொண்ட மாணவி படித்த பள்ளி

இதற்கிடையில் மாணவியின் தந்தை, தன் மகளை மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதாக்க கூறியும், சி.பி.ஐ விசாரணை நடத்தக் கோரியும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதன் அடிப்படையில் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தாமாக முன்வந்து தஞ்சாவூரில் விசாரணை மேற்கொண்டது. ஆணையத்தின் தலைவர் பிரியங்கா கனூங்கோ, உறுப்பினர்கள் மதுலிகா சர்மா, கத்யாயினி ஆனந்த் ஆகியோர் தஞ்சாவூர் ரயில் நிலைய விருந்தினர் இல்லத்தில் விசாரணை நடத்தினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா, வல்லம் டி.எஸ்.பி பிருந்தா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமார், மாவட்டக் கல்வி அலுவலர் குழந்தைராஜன், மாணவிக்கு மருத்துவ சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஹேமா அகிலாண்டேஸ்வரி, ஜீவானந்தம், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் திலகவதி, மாணவியை வீடியோ எடுத்த முத்துவேல், மைக்கேல்பட்டி கிராம மக்கள், முன்னாள் பள்ளி மாணவிகள், தற்போது அதே பள்ளியில் படித்துவரும் மாணவிகள், மாணவியின் தாய் வழி தாத்தா சுப்ரமணி, பாட்டி மங்கையர்கரசி, சமூக ஆர்வலர்கள் பியூஸ்மனுஷ், வழக்கறிஞர் ஜீவக்குமார் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட தரப்பினர் ஆணையத்திடம் ஆஜராகி தங்கள் கருத்தைத் தெரிவித்தனர். மூன்றைரை மணி நேரத்துக்கு மேலாக இவர்களிடம் விசாரணை நடைபெற்றது.

விசாரணைக்கு ஆஜாரானவர்கள்
விசாரணைக்கு ஆஜாரானவர்கள்

ஆணையம் மற்றும் பொதுமக்கள் சார்பில் கேட்கப்படும் கேள்விகளையும், ஆஜராகி தகவல் தெரிவித்தவர்களின் பதில்களையும் கூடுதல் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா ஒருங்கிணைத்தார். தொடர்ந்து ஆணையத்தினர் மாணவி படித்த மைக்கேல்பட்டி பள்ளிக்கு சென்றனர். அங்கு பள்ளியின் அங்கீகார ஆவணங்கள், காப்பகத்தின் ஆவணங்களையும் சரிபார்த்தனர். பின்னர் பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகள், மாணவிகள், காப்பகத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மைக்கேல்பட்டியில் மட்டும் சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதில் சிறார் இல்லம் என்ற பெயரில் ஹாஸ்டலுக்கான அனுமதியை பள்ளி நிர்வாகம் பெற்றிருப்பதாகவும், அந்த உரிமம் முடிந்துவிட்டதாகவும் ஆணைய விசாரணையில் தெரியவந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும், `தங்கள் பேத்தியை அவளது சித்தி கொடுமை செய்திருப்பதாக’ உயிரிழந்த மாணவியின் தாத்தா, பாட்டி ஆணையத்தில் தெரிவித்திருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாத்தா பாட்டி இருவரும், ஆணையத்திடம் `எங்களது மகளான மாணவியின் அம்மா மர்மான முறையில் இறந்துவிட்டார். நாங்கள் அதே பகுதியில் வசித்தாலும், எங்களது மருமகனுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லாமல் போய்விட்டது. மருமகனும் இரண்டாவது திருமணம் செய்துகொண்டுவிட்டார். எங்க பேத்தி ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தார்.

பேத்தியை அவரின் சித்தி கொடுமை செய்வதாக எங்களுக்குத் தகவல் வரும். ஒரு முறை வீட்டிலிருந்த பணத்தைக் காணவில்லை என்று பேத்தியின் கன்னம் மற்றும் கையில் சூடுவைத்துள்ளார். கையில் கற்பூரத்தை ஏற்றியும் கொடுமை செய்துள்ளார். பக்கத்துல உள்ளவங்க இதையெல்லாம் எங்ககிட்ட சொல்லுவாங்க. ஆனாலும் எங்களால எதுவும் செய்ய முடியலை, கேக்கவும் முடியலை. சித்தியால் பல கொடுமைகளை எங்க பேத்தி அனுபவித்தார்” எனத் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விசாரணைக்கு ஆஜாரான மருத்துவர்கள்
விசாரணைக்கு ஆஜாரான மருத்துவர்கள்

இதேபோல் மாணவி பேசிய வீடியோவை எடுத்த முத்துவேல், ``மாணவி விவகாரத்தில் நான் எடுத்த வீடியோ திருப்புமுனையாக அமைந்தது. கடந்த 17-ம் தேதி என்னுடைய நண்பர் மகாலிங்கம் எனக்கு போன் செய்து, என்னுடைய உறவினர் ஒருவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பெற்றோர் விவரம் தெரியாத நபர்கள். அவர்களிடம் போலீஸார் வாக்குமூலம் பெற்றுவருகிறார்கள். யாரையும் அனுமதிக்க மறுக்கிறார்கள் என உதவி கேட்டார்.

அதன் பிறகு நான் சென்று பார்த்தேன். அப்போது இறந்த மாணவியின் சித்தி, பலரும் வீடியோ எடுப்பதாக்க கூறினார். ஆனால் எங்களிடம் யாரும் எதுவும் கேட்கவில்லை, எனவே, என்னையும் ஒரு வீடியோ எடுத்துத் தரச் சொல்லிக் கேட்டார். உள்ளே சென்று அந்த பெண்ணிடம் வீடியோ எடுத்தேன். இரண்டு வீடியோ எடுக்கப்பட்டன. முதல் வீடியோ எடுத்துக்கொண்டு இருக்கும் போது, அந்த மாணவிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

முத்துவேல்
முத்துவேல்

அதனால், வீடியோ எடுப்பதை கட் செய்துவிட்டு, பின்னர் மாணவி நார்மலான நிலைக்கு வந்த பிறகு திரும்ப வீடியோ எடுத்தேன். இரண்டு வீடியோக்களும் தனித் தனி கிடையாது. ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட வீடியோ. அதன் பிறகு என்னுடையே முக்கியமான நண்பர்களுக்கு அனுப்பினேன். அரியலுார் போலீஸாரிடம் இது பற்றிக் கூறியபோது போலீஸ் முறையான ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

இறந்த மாணவியிடம் இரண்டு வீடியோவும், அவரின் சித்தியிடம் இரண்டு வீடியோவும் எடுத்தேன். அந்த வீடியோவை, மாணவி இறந்த பிறகு போலீஸாரிடம் கொடுக்க முயன்றோம். அவர்கள் அதை வாங்கிக்கொள்ளத் தயாராக இல்லை. எங்கள் புகாரையும் படித்துப் பார்க்கவில்லை. போலீஸார் யாருடைய அழுத்தத்தினபேரிலேயோ, எங்கள் நிர்வாகிகளை அசிங்கப்படுத்தி அனுப்பிவிட்டனர்.

போலீஸார் சரியான முறையில், எல்லா வழியிலும் விசாரணை நடத்த வேண்டும். அழுத்தத்தின்பேரில் விசாரித்துவருகின்றனர். மதமாற்றம் விஷயத்தை மட்டும் போலீஸ் ஏற்க மறுகிறார்கள். அந்த மாணவி இறப்பதற்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ என்பதால், அதை மாணவியின் மரண வாக்குமூலமாகத்தான் போலீஸார் எடுத்துக்கொள்ள வேண்டும்” என தெரிவித்திருக்கிறார். ஆணையம் மேற்கொண்ட விசாரணை குறித்த அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் எனக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தினர் தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism