Published:Updated:

நாளொன்றுக்கு 91; ஒரு வருடத்தில் 33,356 வழக்குகள்! -அதிர்ச்சி கொடுத்த பாலியல் வன்கொடுமை புள்ளிவிவரம்

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

2018-ம் ஆண்டு இந்தியா முழுவதும் பதியப்பட்ட குற்ற வழக்குகள் தொடர்பான மொத்த புள்ளி விவரங்களையும் வெளியிட்டுள்ளது என்.சி.ஆர்.பி

இந்தியாவில் பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் 2018-ம் ஆண்டு நடந்த மொத்த குற்றச் சம்பவங்கள் குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி). அதில், 2017-ம் ஆண்டு மட்டும் இந்தியாவில் 50,07,044 குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், 2018-ம் ஆண்டு 50,74,634 குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் 31,32,954 வழக்குகள் இந்தியத் தண்டனை சட்டத்தின்கீழும் 1,94,168 வழக்குகள் சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்களின் கீழும் பதிவாகியுள்ளன. 2018-ம் ஆண்டு மட்டும் ஒரு நாளுக்கு சராசரியாக 80 கொலைகளும் 91 பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் 289 கடத்தல் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

கொலை
கொலை

பாலியல் வன்கொடுமை வழக்குகள்!

பெண்களுக்கு எதிரான குற்றப் பிரிவில் 2017-ம் ஆண்டு 3,59,849 வழக்குகளும் 2018-ம் ஆண்டு 3,78,277 வழக்குகளும் பதிவாகியுள்ளன. அதில் பாலியல் வன்கொடுமை வழக்கு மட்டும் 2017-ம் ஆண்டில் 32,559 மற்றும் 2018-ம் ஆண்டில் 33,356 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த இரு ஆண்டுகளையும் ஒப்பிடுகையில் 2017-ம் ஆண்டைவிட 2018-ம் ஆண்டு 1.3% குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

`நான் அப்பாவி; 3 கொலைகள் நான் செய்யவில்லை!'- ஹாஜிப்பூர் கொலையில் கைதான ஸ்ரீநிவாஸ்

கொலை வழக்குகள்!

2017-ம் ஆண்டில் மொத்தம் 28,653 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. அதே 2018-ம் ஆண்டில் 29,017 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2017-ம் ஆண்டைவிட 2018-ம் ஆண்டியில் 1.3% கொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. 2018-ம் ஆண்டு நடந்த கொலைகளில் 9,623 தகராறின் காரணமாகவும் 3,875 தனி விரோதம் மற்றும் பகை காரணமாகவும் 2,995 ஆதாயத்துக்கான கொலை போன்ற காரணங்களுக்காகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடத்தல்
கடத்தல்

கடத்தல் வழக்குகள்!

கடத்தல் வழக்குகளைப் பொறுத்தவரை 2017-ம் ஆண்டுடன் 2018-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 10.3% அதிகரித்துள்ளது. 2017-ம் ஆண்டு 95,893 கடத்தல் வழக்குகளும் 2018-ம் ஆண்டு 1,05,734 கடத்தல் வழக்குகளும் பதிவாகியுள்ளன. அவற்றில் 2018-ம் ஆண்டு கடத்தப்பட்டவர்களில் 63,356 பேர் சிறார்கள். அதில் 48,106 பேர் சிறுமிகள். அதே ஆண்டு 42,180 பெரியவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 9,415 போ் ஆண்கள், 32,765 போ் பெண்கள். காணாமல் போனவர்களில் 92,137 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். 91,709 பேர் உயிருடனும் 428 பேர் சடலமாகவும் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலேயே உத்தரப்பிரதேசத்தில் 59,445 வழக்குகளும் அதற்கு அடுத்ததாக மத்தியப் பிரதேசத்தில் 35,497 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு