Published:Updated:

2017-ம் ஆண்டு மட்டும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்களுக்கு எதிரான குற்றங்கள்! #NCRBReport

2017-ம் ஆண்டு இந்தியா முழுவதும் குழந்தைகளுக்கு எதிராக 32,254 பாலியல் வன்முறை குற்றங்கள் நடந்துள்ளன.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு ( Prem Davinci )

சமீபத்தில் தேசிய குற்றப் பதிவுகள் முகமை வெளியிட்ட தகவலில், 2017-ம் ஆண்டில் மட்டும் பாலியல் வன்முறை, வரதட்சணை கொடுமை, சைபர் குற்றங்கள், கடத்தல், கொலை, ஆசிட் வீசுதல் என 3,59,849 குற்றங்கள் பதிவாகியுள்ளன.

இந்த எண்ணிக்கையானது, அதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளை விட மிக அதிகம். 2015-ம் ஆண்டு 3,29,243 வழக்குகளும், 2016-ம் ஆண்டு 3,38,954 வழக்குகளும் பதிவாகியிருந்தன.

இந்த அறிக்கையில் பெண்களுக்கு எதிராக அதிக குற்ற வழக்குகள் நடைபெறும் மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இங்கு 56,011 வழக்குகள் பதிவாகியுள்ளன. 31,979 வழக்குகளுடன் இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. 30,992 வழக்குகளுடன் மேற்கு வங்கம் மூன்றாவது இடத்திலும் 29,788 வழக்குகளுடன் மத்தியப்பிரதேசம் நான்காவது இடத்திலும் 25,993 வழக்குகளுடன் ராஜஸ்தான் ஐந்தாவது இடத்திலும் உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை லட்சத் தீவில் மிகக்குறைந்த அளவாக ஆறு வழக்குகள் மட்டும் பதிவாகியுள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தவரை 5,397 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது இந்தியா முழுவதும் நடைபெற்ற குற்றங்களில் 1.5 விழுக்காடு. தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளாவில் 11,057 வழக்குகளும் ஆந்திராவில் 17,909 வழக்குகளும் கர்நாடகாவில் 14,078 வழக்குகளும் பதிவாகியுள்ளன. தவிர, தெலுங்கானாவில் 17,521 வழக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த பட்டியலில், தலைநகர் டெல்லியில் கடந்த மூன்று ஆண்டுகளில் குற்றங்கள் படிப்படியாக குறைத்து வந்திருப்பதைக் காணமுடிகிறது. 2015-ம் ஆண்டு 17,222 வழக்குகளும் 2016-ம் ஆண்டு 15,310 வழக்குகளும் 2017-ம் ஆண்டில் 13,076 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் புள்ளிவிவரம்!

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

இந்தியா முழுவதும் 2017-ம் ஆண்டு வரதட்சணை கொடுமையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 7,838. இதில், தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் 48 பேர்.

இந்தியா முழுவதும் 2017-ம் ஆண்டு பாலியல் வன்முறை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 227. இதில் தமிழகத்தில் கொல்லப்பட்டவர்கள் 2 பேர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
Hasif Khan

2017-ம் ஆண்டு இந்தியா முழுவதும் கடத்தப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 68,735. இதில், தமிழகத்தில் கடத்தப்பட்டவர்கள் மட்டும் 869.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்!

2017-ம் ஆண்டு இந்தியா முழுவதும் குழந்தைகளுக்கு எதிராக 32,254 பாலியல் வன்முறை குற்றங்கள் நடந்துள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 1,587 குற்றங்கள் நடைபெற்றுள்ளன.

குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குற்றங்கள்
குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குற்றங்கள்

2017-ம் ஆண்டு பெண்களுக்கு எதிராக நடைபெற்ற பாலியல் வன்முறைக் குற்றங்களை வயது வாரியாக பின்வரும் படத்தில் காணலாம்.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பாலியல் குற்றங்கள், வரதட்சணை கொடுமை, சைபர் குற்றங்கள், கடத்தல், கொலை, ஆசிட் வீசுதல், தற்கொலைக்குத் தூண்டுதல் போன்ற பல்வேறு காரணிகளில் தொடர்ச்சியாகப் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்துச் செல்வது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது.

``குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்திருப்பது உண்மையா?” - களநிலவரமும் அரசின் கடமையும்