Published:Updated:

`இஸ்ரோவில் வேலை வாங்கித் தருகிறேன்!' - 19 பேரிடம் லட்சங்களை சுருட்டிய அரசுப் பேருந்து ஓட்டுநர் கைது

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலை வாங்கித் தருவதாக 20 பேரிடம் பணமோசடி செய்த அரசுப் பேருந்து ஓட்டுநர் பெருமாள் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரைக் குற்றப்பிரிவு போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

driver Perumal
driver Perumal

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை வீரமாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் என்ற செல்வக்கனி. அரசுப் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். அவர் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலை வாங்கிக் கொடுப்பதாகக் கூறி பலரிடம் பணம் பறித்ததாகப் புகார் எழுந்துள்ளது.

மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தின் மீது பறந்த மர்ம விமானம்! - பணகுடி காவல்நிலையத்தில் புகார்

பெருமாளின் உறவினர் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றுவதால் அவரது உதவியுடன் எளிதாக வேலையில் சேர்ந்து விடலாம் எனத் தெரிவித்திருக்கிறார். இது பற்றிக் கேள்விப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பகுதியைச் சேர்ந்த சேதுராமலிங்கம் என்ற பி.பி.ஏ படித்த இளைஞர், பெருமாளைத் தொடர்புகொண்டுள்ளார்.

``ஸ்கூல்ல சிவன் விடுற பேப்பர் ராக்கெட்ல என்ன விசேஷம் தெரியுமா?!'' - இஸ்ரோ சிவனின் நண்பர் மதன்

சேதுராமலிங்கத்திடம் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி நான்கு லட்சம் ரூபாய் பணத்தை முன்பணமாகக் கொடுத்திருக்கிறார். அதன் பின்னர் வேலைக்கான உத்தரவு வீட்டுக்கு வந்துசேரும் என அவரை அனுப்பி வைத்துள்ளார். அப்போது வந்து மீதிப் பணத்தைச் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார். பணம் கொடுத்து இரண்டரை வருடங்களுக்கும் மேலாகியும் பணிக்கான ஆணை வராததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சேதுராமலிங்கம், பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

`சாதனை படைக்கத் தொடர்ந்து உழைப்போம்!’ - தேவகோட்டைப் பள்ளிக்கு இஸ்ரோ சிவன் எழுதிய நெகிழ்ச்சி கடிதம்
மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் வேலை வாங்கிக்கொடுப்பதாக 19 பேரிடம் டிரைவர் பெருமாள் பணம் பறித்திருக்கிறார். அவரது பேச்சை நம்பி இளைஞர்கள் ஏமாந்திருக்கிறார்கள்.
நெல்லை குற்றப்பிரிவு காவல்துறை

வேலை கிடைக்காத நிலையில், பணமும் திரும்பக் கிடைக்காததால் நெல்லை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த போலீஸார் பெருமாளைக் கைது செய்தார்கள். அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் இது போன்று 19 பேரிடம் அவர் ஏமாற்றி பணமோசடி செய்தது தெரியவந்தது. பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.