Published:Updated:

`சர்ஜிக்கல் பிளேடு; தலையில் காயம்; மாயமான பெண் சடலமாக மீட்பு!’- ஆந்திராவில் நடந்த கொடூரம்

ஆந்திராவில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Representation Image
Representation Image

நெல்லூர் மாவட்டத்துக்குட்பட்ட பகுதியில் ஜனவரி 5-ம் தேதி இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்கு இரவு 8 மணியளவில் பொருள்களை வாங்கச் சென்ற அந்த இளம்பெண் பின்னர் வீடு திரும்பவில்லை. இரவு மழைப்பொழிவு இருந்தால் மழைக்கு அருகில் எங்காவது ஒதுங்கியிருக்கலாம் வந்துவிடுவார் எனக் குடும்பத்தினர் நினைத்திருந்தனர்.

நீண்டநேரமாகியும் அவர் வராததால் அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் அந்தப் பகுதியில் தேட ஆரம்பித்தனர். விடியற்காலையில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் அந்தப் பெண்ணை சடலமாகக் கண்டெடுத்தனர். இதையடுத்து குடூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Representation Image
Representation Image

இளம்பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. அறுவைசிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கத்தியைக் கொண்டு கழுத்தறுத்து கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாரின் சந்தேகப்பார்வை சாய் என்பவர் மீது திரும்பியது. அறுவைசிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் கத்தியைக் கொண்டு அந்த நபர் ஏற்கெனவே கொலை செய்திருந்தால் இந்தச் சம்பவத்தில் சாய்க்கு தொடர்பு இருக்குமா என போலீஸார் சந்தேகித்தனர். இதையடுத்து சாயைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

`பெண் கேட்டு வந்தான்; தரவில்லை!' - கேரள சிறுமிக்கு வால்பாறையில் நேர்ந்த துயரம்

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது கொலை செய்ததை சாய் ஒப்புக்கொண்டுள்ளார். தன்னுடைய கூட்டாளிகள் 4 பேருக்கும் இதில் தொடர்பு இருப்பதாகக் கூறியுள்ளார். இதையடுத்து சாய், வெங்கடேஷ், சரத், வினோத், லஷ்மையா ஆகிய 5 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், ``அந்தப் பெண் மனவளர்ச்சி குன்றியவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜனவரி 5-ம் தேதி இரவு 8 மணியளவில் அருகில் உள்ள கடைக்குச் சென்றுள்ளார்.

இரவு மழைப்பொழிவு இருந்ததால் அந்தக் கிராமத்தில் இருந்த கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தெருக்களில் ஆள்கள் நடமாட்டம் இல்லை. இளம்பெண் தனியாக வருவதைக் கவனித்த சாய் வீட்டில் விடுவதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார். அவருடன் செல்ல அந்தப் பெண் முதலில் மறுத்துள்ளார். அவரை சமாதானம் செய்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளார்.

Representation Image
Representation Image

ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அமைந்துள்ள வீட்டில் வைத்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அந்தப் பெண் கூச்சலிடவே அவரது தலையில் கற்களைக் கொண்டு தாக்கியுள்ளார். அவரது தலையில் ரத்தம் வழிந்துள்ளது மயக்க நிலைக்குச் சென்றுள்ளார். இதையடுத்து அருகில் இருந்த மற்றொரு வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தார். சாய்யின் கூட்டாளிகள் நான்கு பேரும் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து அந்தக் கும்பல் தப்பிச் சென்றுவிட்டது” எனக் கூறினார்.