Published:Updated:

குழந்தைகளைக் கொன்று தற்கொலை செய்துகொண்ட நேபாள நாட்டுப் பெண்?! - கோவை அதிர்ச்சி

தற்கொலை
தற்கொலை

கோவை அருகே நேபாளம் நாட்டைச் சேர்ந்த பெண்மணி இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நேபாள நாட்டைச் சேர்ந்தவர் ஆதித்ய பண்டாரி. இவர் கோவை மாவட்டம், மாதம்பட்டி அருகே குப்பனூர் பகுதியிலுள்ள ஒரு தோட்டத்தில் தங்கி பண்ணை வேலை செய்துவருகிறார். இவருக்கும் தன்கலா என்ற பெண்ணுக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

ஆதித்ய பண்டாரி
ஆதித்ய பண்டாரி
ஒருமுறை கடந்தால் 3 மடங்கு கட்டணம்! - கோவை எல் அண்ட் டி  சுங்கச்சாவடி சர்ச்சை

இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தன்கலாவும் குழந்தைகளும் சில மாதங்களுக்கு முன்புதான் அங்கு வந்ததாகவும், தன்கலாவும் பண்ணை வேலை செய்துவந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால், அந்த வேலை பிடிக்காததால் இது தொடர்பாக கணவன் மனைவிக்குள் அவ்வபோது வாக்குவாதம் ஏற்பட்டுவந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆதித்ய பண்டாரி நேற்று பணிக்குச் சென்றுவிட்டு, சிறிது நேரம் கழித்து தன்கலாவை அழைத்திருக்கிறார்.

சம்பவம் நடந்த வீடு
சம்பவம் நடந்த வீடு

தன்கலா தனக்குத் தலைவலிப்பதாக கூறியதாகவும், அதற்கு சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு பணிக்கு வருமாறு பண்டாரி கூறியதாகவும் தெரிகிறது. மதிய உணவுக்காக பண்டாரி வீட்டுக்குச் சென்றபோது கதவு பூட்டியிருந்தது. நீண்ட நேரம் கதவைத் தட்டியும் திறக்கவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனால், ஜன்னல் கண்ணாடியை கைகளில் உடைத்து உள்ளே சென்றிருக்கிறார். அப்போது மனைவி, குழந்தைகள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்திருக்கிறார்கள். பண்டாரி கதறி அழ, அருகில் இருந்தவர்கள் வந்திருக்கிறார்கள். தகவல் அறிந்து வந்த போலீஸார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சடலம்
சடலம்

மேலும், ஆத்திய பண்டாரியிடமும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு