Published:Updated:

ஆவடி: இரண்டாண்டு காதல்; திருமணமான இரண்டாவது நாளில் இளம் பெண் தற்கொலை! - நடந்தது என்ன?

தற்கொலை

காதலித்து கரம் பிடித்தவரை பதிவுத் திருமணம் செய்த பட்டதாரி பெண், திருமணமான இரண்டாவது நாளில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனால் ஓட்டுமொத்த குடும்பமும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

ஆவடி: இரண்டாண்டு காதல்; திருமணமான இரண்டாவது நாளில் இளம் பெண் தற்கொலை! - நடந்தது என்ன?

காதலித்து கரம் பிடித்தவரை பதிவுத் திருமணம் செய்த பட்டதாரி பெண், திருமணமான இரண்டாவது நாளில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனால் ஓட்டுமொத்த குடும்பமும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

Published:Updated:
தற்கொலை

சென்னை பூந்தமல்லி, முத்துகுமரன் நகரைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (25). இவர் ஆவடி காவல் நிலையத்தில் கடந்த 8.4.2022-ம் தேதி கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட முகவரியில் சொந்த வீட்டில் வசித்து வருகிறேன். எனக்கு திருமணமாகி 8 மாத ஆண் குழந்தை உள்ளது. எனது அப்பா தங்கராஜ், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். அம்மா வச்சலா என்னுடன் வசித்து வருகிறார். என்னுடன் பிறந்தவர்கள் 5 அக்கா. அதில் கடைசி அக்கா அனிதா, பி.ஏ படித்துள்ளார். என்னுடைய நான்கு அக்காளுக்கும் திருமணமாகிவிட்டது. அனிதா அக்காவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக மாப்பிள்ளை பார்த்து வந்தோம்.

முதல் தகவல் அறிக்கை
முதல் தகவல் அறிக்கை

இந்தநிலையில் கடந்த 6.4.2002-ம் தேதி மதியம் என்னிடம் போனில் பேசிய அனிதா, தன்னுடன் வேலைப்பார்க்கும் ஒருவரைப் பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறினார். உடனே நான், எதுவாக இருந்தாலும் வீட்டுக்கு வா, பேசி கொள்ளலாம் என்று கூறினேன். அன்று இரவு நான் மீண்டும் அனிதா அக்காவுக்கு போனில் பேசி, வீட்டுக்கு வரும்படி கூப்பிட்டேன். அதற்கு அவள், மாப்பிள்ளை வீட்டார் என்னை அங்கு அழைத்து வர மறுக்கின்றனர் என்று தெரிவித்தார். பின்னர் 7.4.2022-ம் தேதி ஆவடி காவல் நிலையத்திலிருந்து என்னிடம் பேசினார்கள். அப்போது உனது அக்கா அனிதா பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் அது தொடர்பான விசாரணைக்கு வரும்படி போலீஸ்காரர் ஒருவர் தெரிவித்தார். இதையடுத்து விசாரணைக்காக நான், எனது அம்மா, என்னுடைய குடும்பத்தினர் 7-ம் தேதி காவல் நிலையத்துக்கு வந்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விசாரணையில் எனது அனிதா அக்கா, அவருடன் வேலை செய்யும் உதயா என்பவரை கடந்த 6.4.2022-ம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டதாக போலீஸார் கூறினார்கள். இந்த தகவலை தெரிந்து கொண்டு நாங்கள் வீட்டுக்குச் சென்று விட்டோம். இதையடுத்து 7.4.2022-ம் தேதி இரவு 8 மணியளவில் எனது இன்னொரு அக்கா சுமதி, அனிதாவிடம் போனில் பேசியுள்ளார். பின்னர் 8.4.2022-ம் தேதி அனிதாவை தொடர்பு கொண்டு போது அனிதா போனை எடுக்கவில்லை. அன்றைய தினம் முற்பகலில் ஆவடி காவல் நிலையத்திலிருந்து என்னிடம் பேசிய போலீஸ்காரர் ஒருவர், அனிதா தூக்கிட்டு இறந்துவிட்டதாக தகவல் சொன்னார். அனிதா இறப்பு தொடர்பாக உதயா, அவரின் அம்மா லதா, அப்பா குமார் ஆகியோரிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

தற்கொலை
தற்கொலை

இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், அனிதாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர். திருமணமான இரண்டாவது நாளிலேயே புதுப்பெண் அனிதா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆர.டி.ஓ. விசாரணை அறிக்கை அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையை போலீஸார் எடுக்கவுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து ஆவடி போலீஸார் கூறுகையில், ``பூந்தமல்லியைச் சேர்ந்த பட்டதாரிப் பெண் அனிதாவும், ஆவடி, கோவர்த்தனகிரி, அன்பு நகரைச் சேர்ந்த உதயாவும் (24) காட்டுப்பாக்கம் பகுதியில் உள்ள கம்பெனியில் ஒன்றாக வேலைப்பார்த்து வந்தனர். அதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது, காதலாக மலர்ந்துள்ளது. இவர்கள் இரண்டு ஆண்டுகள் காதலித்து வந்துள்ளனர். அனிதாவுக்கு வீட்டில் வரன் பார்த்துக் கொண்டிருந்ததால் இந்தக் காதல் ஜோடி, ராயபுரத்தில் 6-ம் தேதி பதிவு திருமணம் செய்துக் கொண்டனர். ஆவடி காவல் நிலையத்தில் பதிவு திருமணம் செய்து கொண்ட ஜோடி தஞ்சமடைந்தனர். அதனால் அனிதாவின் குடும்பத்தினருக்கு தகவலைத் தெரிவித்தோம். அதுதொடர்பாக காவல் நிலையத்தில் 7-ம் தேதி இரண்டு குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. திருமணம் செய்து கொண்டவர்கள் மேஜர் என்பதால் அவர்களின் விருப்பத்தின்படி ஆவடியில் உள்ள மாப்பிள்ளை வீட்டில் புதுமண தம்பதியினர் குடியிருந்தனர்.

தற்கொலை
தற்கொலை
சித்தரிப்புப் படம்

இந்தச் சூழலில்தான் அனிதா, 8-ம் தேதி, தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டிருக்கிறார். அனிதாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம். அவரின் செல்போனையும் ஆய்வு செய்துவருகிறோம். அனிதாவின் கணவர் உதயா, அவரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அனிதாவின் குடும்பத்தினரிடமும் விசாரித்துள்ளோம். ஆர்.டி.ஓ விசாரணைக்குப்பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அனிதாவின் சடலம் பிரேத பரிசோதனைக்குப்பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்" என்றனர்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் திருமணத்துக்குப்பிறகு அனிதா மனவேதனையில் இருந்ததது தெரியவந்துள்ளது. அதனால்தான் இந்த விபரீத முடிவை எடுத்ததாகவும் தெரியவருகிறது.

திருமணமான இரண்டாவது நாளில் பட்டதாரிப் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism