Published:Updated:

பாலியல் வன்கொடுமை; நகைகள் மாயம்! - திருச்சியை அதிரவைத்த புதுமணப் பெண் கொலை

கொலை நடந்த இடம்
கொலை நடந்த இடம்

புதுமணப் பெண் நகைக்காக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற பல்வேறு கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பிச்சாண்டார்கோயில் அருகே உள்ள வாழவந்திபுரம் பகுதியில் வசிப்பவர் அருள்ராஜ்(28). இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள பைப் கம்பெனி ஒன்றில் பணிப்புரிந்து வருகிறார். அருள்ராஜுக்கும் லால்குடி மேலமணக்கால் சூசையபுரத்தைத் சேர்ந்த கிருஷ்டி ஹெலன்ராணி (26) ஆகியோருக்கும் கடந்த 10-07-2020 அன்று குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. புதுமணத் தம்பதி இருவரும் அருள்ராஜ் வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். கணவன் - மனைவி இடையே அடிக்கடி பிரச்னை வரும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் இயற்கை உபாதையைக் கழிக்க வீட்டின் அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றுக்குத் தனியாகச் சென்ற கிருஷ்டி வீடு திரும்பவில்லை.

அருள் ராஜ்- கிருஷ்டி
அருள் ராஜ்- கிருஷ்டி

இதனால் கணவர் அருள்ராஜ் மற்றும் அவரது உறவினர்கள் கொள்ளிடம் ஆற்றுப் பகுதிக்குச் சென்று பார்த்த போது, ஆற்றில் தேங்கியுள்ள குட்டை நீரின் கரையோரத்தில் சடலமாக காணப்பட்டார் கிருஷ்டி. அவர், அணிந்திருந்த நகைகள் மாயமாகி இருந்தன. இதையடுத்து, கிருஷ்டியைத் தேடிச் சென்றவர்கள் சடலம் குறித்து கொள்ளிடம் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சமயபுரம் கொள்ளிடம் போலீஸார் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காரைக்கால்: `தாயின் இரண்டாவது கணவர் கொலை; 25 ஆண்டுகள் தலைமறைவு!’ - போலீஸில் சிக்கிய நபர்

இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க லால்குடி டி.எஸ்.பி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கபட்டுள்ளன. புதுப் பெண் நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற பல்வேறு கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே வேளையில் பெண்ணின் கணவர் அருள்ராஜையும் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணை

சம்பவ இடத்துக்கு,கைரேகை நிபுணர்களும், `ஸ்பார்க்’ மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் ஆற்றுப் பகுதியிலேயே சிறிது நேரம் சுற்றிச்சுற்றி வந்தது. சம்பவ இடத்துக்கு வந்த திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன், நேரில் ஆய்வு செய்து தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு