Published:Updated:

திருமணமான பெண்ணுடன் பழக்கம்; அந்தரங்க போட்டோ; சஸ்பெண்டான `சர்ச்சை' இன்ஸ்பெக்டர் முனிசேகர் யார்?

கொள்ளையனைப் பிடிக்க ராஜஸ்தான் மாநிலத்துக்குச் சென்றபோது துப்பாக்கியால் சுட்டத்தில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் உயிரிழந்தார். இந்த வழக்கில் தொடர்புடைய இன்ஸ்பெக்டர் முனிசேகர், திருமணமான பெண்ணுடன் பழகியதால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் அஷ்ரப் அன்சாரி. இவர், கடந்த 20.9.2021-ம் தேதி ஆன்லைன் மூலமாக டி.ஜி.பி., வடக்கு மண்டல ஐ.ஜி., காஞ்சிபுரம் டி.ஐ.ஜி., செங்கல்பட்டு எஸ்.பி ஆகியோருக்குப் புகார் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது,

``எனக்கு 18.6.2012-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் திருமணம் நடந்தது. எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். என் மனைவியின் சொந்த ஊர் திருக்கழுக்குன்றம் அருகேயுள்ள கிராமம் என்பதால் அங்குள்ள அவரின் சகோதரி வீட்டுக்குச் சென்றுவருவார். அங்கு சென்று வரும்போதெல்லாம் என் மனைவியின் நடவடிக்கையிலும் பேச்சிலும் மாற்றம் தெரிந்தது.

Vikatan

அதனால் என் மனைவியின் செல்போனை எடுத்து ஆய்வு செய்தபோது திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசேகர் என்பவருடன் அவருக்குப் பழக்கம் இருந்தது தெரியவந்தது. இன்ஸ்பெக்டர் முனிசேகரும், என் மனைவியும் வாட்ஸ்அப் காலில் பேசிய புகைப்படங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இது குறித்து என் மனைவியிடம் கேட்டதற்கு அவர் சரியான பதில் சொல்லவில்லை. அதனால் ஏற்பட்ட பிரச்னையில் என் மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவரின் சகோதரி வீட்டுக்குச் சென்றுவிட்டார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் முனிசேகரை அவரின் செல்போனில் தொடர்புகொண்டபோது அவர் பதிலளிக்கவில்லை. தற்போது எனது உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் முனிசேகர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் முனிசேகரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பிறகு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இன்ஸ்பெக்டர் முனிசேகர் ஏற்கெனவே சர்சையில் சிக்கியவர். சென்னையில் கொளத்தூர் நகைக்கடை கொள்ளை தொடர்பாக கொள்ளையர்களைப் பிடிக்க கடந்த 2017-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன், கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் தலைமையிலான தனிப்படை ராஜஸ்தான் சென்றது. ராஜஸ்தானில் கொள்ளையன் நாதுராமுடன் ஏற்பட்ட மோதலில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் துப்பாக்கிக்குண்டு பாய்ந்து இறந்தார். பெரியபாண்டியனின் உடலில் துளைத்தது இன்ஸ்பெக்டர் முனிசேகரின் துப்பாக்கிக்குண்டுகள் என விசாரணையில் தெரியவந்தது. அது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலம், ஜெய்த்ரன் போலீஸார், நாதுராம் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்தச் சம்பவத்தில் பெரியபாண்டியனின் மனைவியிடம் முனிசேகர் மன்னிப்புக் கேட்டார்.

Vikatan
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன்
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன்

பின்னர் அவர் சென்னையிலிருந்து வேறு மாவட்டத்துக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். அதன் பிறகுதான் காவல்துறை உயரதிகாரி ஒருவரின் சிபாரிசால் சென்னை அருகேயுள்ள செங்கல்பட்டு மாவட்டத்துக்கு இடமாறுதலாகி வந்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில் பணியாற்றியபோதுதான் திருமணமான பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இன்ஸ்பெக்டர், சம்பந்தப்பட்ட பெண் ஆகியோரின் தனிப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு