Published:Updated:

கூட்டுப் பாலியல் வன்கொடுமை... நண்பர்களுக்கிடையே மோதலில் கொலை! - நெய்வேலி அதிர்ச்சி

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை செய்வதில் ஏற்பட்ட சண்டையில் நண்பனையே கொலை செய்துவிட்டு நாடகமாடிய விவகாரம் நெய்வேலியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடலூர் மாவட்டம், நெய்வேலியை அடுத்த கொல்லிருப்புக் காலனிப் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (25), ராஜதுரை (25), சதீஷ்குமார் (23), சிவபாலன் (22), கார்த்திக் (23) ஆகிய ஐந்து பேரும் எப்போதும் இணைபிரியாத நண்பர்கள். கடந்த 23-ம் தேதி இரவு சுமார் 11 மணியளவில் முகம், தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயத்துடன் பிரகாஷை மந்தாரக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றிருக்கிறார்கள் மற்ற 4 நண்பர்கள். இருசக்கர வாகன விபத்தில் அடிபட்டுவிட்ட தங்கள் நண்பனைக் காப்பாற்றும்படி அங்கிருந்த மருத்துவர்களிடம் கூறியிருக்கிறார்கள். ஆனால், பிரகாஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூற, நண்பர்கள் 4 பேரும் தரையில் படுத்து கதறி அழுதிருக்கின்றனர்.

கொலை செய்யப்பட்ட பிரகாஷ்
கொலை செய்யப்பட்ட பிரகாஷ்

மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த நெய்வேலி தெர்மல் காவல்துறையினர், பிரகாஷின் உடலை விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வு பரிசோதனைக்கு அனுப்பியதோடு, உயிரிழந்த பிரகாஷின் நண்பர்கள் ராஜதுரை, சதீஷ்குமார், கார்த்திக், சிவபாலன் ஆகியோரிடம் விபத்து நடந்த இடம், விதம் குறித்து விசாரணையை மேற்கொண்டிருக்கின்றனர்.

அப்போது, ``டாக்டர்ட்ட பொய் சொல்லிட்டோம். இப்போ உண்மையைச் சொல்லிடறோம். புதிய அனல் மின் நிலையத்துக்குப் பின்னாடி உட்கார்ந்து நாங்க பீர் குடிச்சிக்கிட்டிருந்தோம். அப்போ அங்க வந்த மர்ம கும்பல் பிரகாஷை அடிச்சிப் போட்டுட்டு ஓடிடுச்சி. அதில் மயக்கம் போட்டு விழுந்த பிரகாஷை நாங்க ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டு வந்தோம்” என்று கூறியிருக்கிறார்கள்.

குற்றவாளிகள்
குற்றவாளிகள்

4 பேரும் போதையில் இருப்பதை அறிந்த போலீஸார்,போதை தெளிந்ததும் விசாரிக்கலாம் என்று அவர்களைக் காவல் நிலையத்திலேயே அமர வைத்தனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த கணவனை இழந்த 3 குழந்தைகளின் தாய் கொடுத்த புகார், வழக்கின் திசையை முற்றிலும் வேறு பக்கம் திருப்பியது.

அந்தப் பெண் காவல்துறையினரிடம், ``என் பெயர் சௌமியா வயது 31 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சில வருஷத்துக்கு முன்னாடி கணவர் இறந்துட்டார். வடலூர் சந்தைக்கு போயிட்டு, சொந்தக்காரர் கூட, டூவீலர்ல வீட்டுக்கு வந்துட்டிருந்தேன்.

குற்றவாளிகைக் கைது செய்ய ஆர்ப்பாட்டம்
குற்றவாளிகைக் கைது செய்ய ஆர்ப்பாட்டம்

ராத்திரி 8.30 மணிக்கு புது அனல் மின் நிலையத்துக்குப் பின்னாடி இருக்கிற தைலமரக்காட்டுப் பக்கமா வந்தபோது, அங்க தண்ணி அடிச்சிட்டிருந்தவங்க எங்களை வழி மறிச்சு வம்பு பண்ணாங்க.

அதைத் தட்டிக்கேட்ட என் உறவினரை ஆபாசமாத் திட்டி, கண்மூடித்தனமான அடிச்சி விரட்டிட்டாங்க. என்னை பலவந்தமா தைலமரக் காட்டுக்கு இழுத்துட்டுப் போனாங்க. அவங்ககிட்ட என்னை விட்டுருங்கனு கெஞ்சினேன். ஆனா, அவங்க என்னை வாய்க்குவந்தபடி பேசி, கண்டபடி அடிச்சாங்க. அப்புறம், 5 பேரும் பலவந்தமா என்னை வன்புணர்வு செஞ்சுட்டாங்க.

கொலையான பிரகாஷ்
கொலையான பிரகாஷ்

அப்புறம் அதுல இரண்டு பேர் (கார்த்தி, ராஜதுரை) மட்டும், `வீட்டுக்கு பஸ் ஏத்தி விடுறோம்’னு சொல்லி, பைக்ல என்னைக் கூட்டிட்டுப் போனாங்க. ஆனா, சாம்பல் ஏரிக்கு கூட்டிட்டுப் போய் அங்கேயும் என்னை வன்புணர்வுக்கு உள்ளாக்குனாங்க. அப்போ மத்த மூனு பேரும் எங்களுக்குத் தெரியாமலே எங்களைப் பின்தொடர்ந்து வந்து, அவங்களுக்குள்ளேயே பயங்கரமா சண்டை போட்டுக்கிட்டாங்க. இதுதான் சமயம்னு நான் தப்பிச்சு ஓடி வந்துவிட்டேன். அவங்கமேல நடவடிக்கை எடுங்க” என்று கதறியிருக்கிறார்.

ட்ரம்ப்பைவிட 17 மடங்கு சொத்து; ஆண்டுக்கு ஒரு டாலர் சம்பளம்- ட்ரம்ப்பை எதிர்க்கும் ப்ளூம்பெர்க் யார்?

சந்தேகமடைந்த காவல்துறையினர் சதீஷ்குமார், சிவபாலன், ராஜதுரை, கார்த்திக் ஆகியோரை சௌமியாவிடம் காட்ட, இவர்கள்தான் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தனர் என்று அடையாளம் காட்டியுள்ளார். உஷாரான காவல்துறை அவர்கள் 4 பேரிடமும் என்ன நடந்தது என்று தனித்தனியே தங்களது `பாணியில்’ விசாரிக்க வழக்கில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.

``சௌமியாவை பஸ் ஏற்றிவிடத்தான் நாங்கள் அவரை அழைத்துச் சென்றோம். ஆனால், போகும் வழியில் மீண்டும் அவரை அடைய வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. அதனால் அவரை சாம்பல் ஏரிக்குக் கூட்டிப்போனோம். அப்போது, எங்களைப் பின் தொடர்ந்து வந்த பிரகாஷ், சிவபாலன், சதீஷ்குமார் ஆகியோருக்கும் எங்களுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போதான் நண்பன் என்றும் பார்க்காமல் பிரகாஷ் தலையில் கட்டையால் அடித்தோம். அதில் அவன் செத்துவிட்டான்” என்றனர்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமை
கூட்டுப் பாலியல் வன்கொடுமை

இதுகுறித்து நம்மிடம் பேசிய தெர்மல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் லதா, ``சௌமியா கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர்களைக் கைது செய்து, பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு பதிவு செய்திருக்கிறோம். இந்த விவகாரத்தில் இன்னும் சிலர் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு