Published:Updated:

கோவை கார் வெடிப்பு வழக்கு: `109 பொருள்கள் பறிமுதல்...’ - என்.ஐ.ஏ எஃப்.ஐ.ஆர் சொல்வதென்ன?!

கோவை குண்டு வெடிப்பு

கோவை கார் வெடிப்பு வழக்கில் என்.ஐ.ஏ பதிவு செய்திருக்கும் முதல் தகவல் அறிக்கையில் 109 பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கோவை கார் வெடிப்பு வழக்கு: `109 பொருள்கள் பறிமுதல்...’ - என்.ஐ.ஏ எஃப்.ஐ.ஆர் சொல்வதென்ன?!

கோவை கார் வெடிப்பு வழக்கில் என்.ஐ.ஏ பதிவு செய்திருக்கும் முதல் தகவல் அறிக்கையில் 109 பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Published:Updated:
கோவை குண்டு வெடிப்பு

கோவை, உக்கடம் பகுதியில் கடந்த 23-ம் தேதி அதிகாலையில் கார் ஒன்று வெடித்துச் சிதறியது. அந்த காரை ஓட்டி வந்த ஐமேஷா முபின் உயிரிழந்தார். இந்த வழக்கை உக்கடம் போலீஸார் விசாரித்துவந்தனர். சம்பவம் நடந்த இடத்திலிருந்து ஆணிகள், பால்ரஸ்கள் சிக்கின. அடுத்து, உயிரிழந்த முபின் வீட்டிலிருந்து வெடிகுண்டுகளைக் தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடி மருந்துகளும் சிக்கின. இதையடுத்து இந்த வழக்கு என்.ஐ.ஏ-வுக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில் சென்னை என்.ஐ.ஏ வழக்கு பதிவுசெய்திருக்கிறது. என்.ஐ.ஏ பதிவுசெய்த முதல் தகவல் அறிக்கையில், கடந்த 23.10.2022-ம் தேதி உக்கடம் பகுதியிலுள்ள ஈஸ்வரன் கோயில் தெருவில் டிஎன் 01 எஃப் 6163 என்ற பதிவு எண் கொண்ட மாருதி கார் அதிகாலை 4 மணியளவில் சென்றபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது.

ஜமேசா முபின்
ஜமேசா முபின்

காருக்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது. இந்தச் சம்பவத்தில் கோயில் பெயர் பலகை அந்தப் பகுதியிலிருந்த கடை ஆகியவை சேதமடைந்திருக்கின்றன. விசாரணையில் உயிரிழந்தவர் உக்கடம், கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஐமேஷா முபின் என்பது தெரியவந்தது. விசாரணையிலும் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையிலும் 109 பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

அதில் பொட்டாசியம் நைட்ரேட், பிளாக் பவுடர், தீப்பெட்டி, இரண்டு மீட்டர் நீளமுள்ள கிராக்கர் ஃபீஸ், நைட்ரோ கிளிசரின், ரெட் பாஸ்பரஸ், பெடின் பவுடர், அனுமினியம் பவுடர், oxy 99, ஆக்சிஜன் சிலிண்டர், சல்பர் பவுடர், சர்ஜிக்கல் பிளேடு, கண்ணாடிகள், 9 வாட்ஸ் பேக்டரி, வயர், ஆணிகள், சுவிட்ச், சிலிண்டர், ரெகுலேட்டர், டேப், கையுறைகள், ஜிகாத் வரிகள்கொண்ட நோட்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

கோவை கார் வெடிப்பு வழக்கு: `109 பொருள்கள் பறிமுதல்...’ - என்.ஐ.ஏ எஃப்.ஐ.ஆர் சொல்வதென்ன?!
Premkumar SK

இந்தச் சம்பவம் தொடர்பாக கோயிலின் பூசாரி சுந்தரேசன் புகாரளித்திருக்கிறார். இந்த வழக்கு முதலில் சந்தேக மரணம் என்றும், வெடிபொருள்கள் தடைச் சட்டம் ஆகிய பிரிவுகளில் உக்கடம் போலீஸார் பதிவு செய்திருந்தார்கள். அதையடுத்து மத்திய அரசின் உத்தரவின்படி சென்னை என்.ஐ.ஏ எஸ்.பி ஸ்ரீஜித் இந்த வழக்கைப் பதிவுசெய்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. எஃப்.ஐ.ஆர் சென்னை பூந்தமல்லியிலுள்ள என்.ஐ.ஏ நீதிமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் என்.ஐ.ஏ அலுவலகம் தொடங்கப்பட்டு கோவைச் சம்பவம்தான் முதல் வழக்காகப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.