Published:Updated:

`அல்கொய்தா அமைப்பும்.. ஃபேஸ்புக் `லைக்’கும்!’- என்.ஐ.ஏ ரேடாரில் திருச்சி இளைஞர்

கடந்த சில மாதங்களாகவே, தேசிய புலனாய்வு அமைப்பினர் சர்புதீனின் முகநூல் கணக்கை கண்காணித்து வந்தனர்.

என்.ஐ.ஏ.சோதனை
என்.ஐ.ஏ.சோதனை

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கே.ஆர்.எஸ் நகரில் வசித்து வருபவர் சர்புதீன். இவர் அவ்வப்போது அரபு நாடுகளுக்குச் சென்று பணியாற்றி வந்தார். மேலும் இவர், அல்-கொய்தா அமைப்பின் முகநூல் கணக்கில் இணைந்து அல்கொய்தா அமைப்பினர் வெளியிடும் கருத்துகளுக்கு பதிலளித்தும், அவர்கள் வெளியிடும் ஆவணங்களை டவுன்லோட் செய்வது மற்றும் லைக் செய்வதாக கூறப்படுகிறது.

சிக்கிய லேப்டாப், மெமரி கார்டுகள்! - காயல்பட்டினம், நாகூரில் என்.ஐ.ஏ நடத்திய `திடீர்' ரெய்டு

இதுதொடர்பாக கடந்த சில மாதங்களாகவே, தேசிய புலனாய்வு அமைப்பினர் சர்புதீனின் முகநூல் கணக்கை கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், இன்று காலை தேசிய புலனாய்வு முகமை அமைப்பின் கேரள டி.எஸ்.பி ஜார்ஜ் தலைமையில் 10 -க்கும் மேற்பட்ட போலீஸார் மற்றும் திருச்சி மாநகர போலீஸார் துணையுடன் இன்று கே.ஆர்.எஸ் நகரிலுள்ள சர்புதீன் வீட்டுக்கு வந்த என்.ஜ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

என்.ஐ.ஏ.சோதனை
என்.ஐ.ஏ.சோதனை

அவர்கள் சர்புதீனின் குடும்ப உறுப்பினர்களிடமும் விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சோதனையின் அடிப்படையில் சர்புதீன் மைத்துனர் ஜாபர் என்பவரும் தொடர்பில் இருப்பதாக தெரியவந்துள்ளது. அவரது வீட்டிலிருந்து செல்போன், பென் டிரைவ் மற்றும் பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றிய என்.ஐ.ஏ அதிகாரிகள், தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த இருவரையும் விசாரணைக்காக கேரளா அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில், மற்றொரு குழு தேசிய புலனாய்வுத் துறையினர் தஞ்சையிலும் ஒரு வீட்டில் சோதனை நடத்திவருவதாக கூறப்படுகிறது. என்.ஐ.ஏ அதிகாரிகளின் சோதனையால் திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் பரபரப்பு நிலவுகிறது.