Published:Updated:

கோவை: ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள்! - ரயில் நிலையத்தில் சிக்கிய நைஜீரியா நாட்டுக்காரர்

போதைப்பொருள் கடத்திய எட்வின் கிங்ஸ்லி
போதைப்பொருள் கடத்திய எட்வின் கிங்ஸ்லி

கோவை ரயில் நிலையத்தில் போதைப்பொருள் கடத்திய விவகாரத்தில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில், சமீபகாலமாக போதைப்பொருள்கள் பயன்படுத்துவது அதிகரித்துவருகிறது. இதனால், போலீஸார் கண்காணிப்புப் பணிகளில் தீவிரம் காட்டிவருகின்றனர். இந்தநிலையில், டெல்லியிலிருந்து கோவை வழியாக திருவனந்தபுரம் செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில்,

கோவை ரயில் நிலையம்
கோவை ரயில் நிலையம்
மிரட்டும் போதை ஊசி... நடுநடுங்கும் கோவை!

போதைப்பொருள் கடத்தப்படுவதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் ரயில் நிலையத்துக்குச் சென்றனர்.

தொடர்ந்து மத்திய போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள், கோவை ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகிக்கும் வகையில் சென்ற வெளிநாட்டு இளைஞர் ஒருவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

அவரது உடைமைகளைச் சோதனையிட்டதில், எட்டு பொட்டலங்களில் 1.15 கோடி ரூபாய் மதிப்பிலான 2.3 கிலோ மெத்தாம்பேட்டமைன் என்ற போதைப் ருளை மறைத்துவைத்து கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரைக் கைதுசெய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், அவரிடமிருந்து போதைப்பொருள்களையும் பறிமுதல் செய்தனர். அதிகாரிகள் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த எட்வின் கிங்ஸ்லி என்று தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் கடத்திய எட்வின் கிங்ஸ்லியுடன் அதிகாரிகள்
போதைப்பொருள் கடத்திய எட்வின் கிங்ஸ்லியுடன் அதிகாரிகள்

திருப்பூரில் தங்கியிருந்து கார்மென்ட் பொருள்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் பணிகளுடன், போதைப்பொருள் கடத்தலிலும் அவர் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு