Published:Updated:

தஞ்சாவூர்: நைட்டி, டவுசர் கொள்ளையர்கள் கூட்டணி அமைத்து திருட முயற்சி! - தப்பிய வீடு, உடைந்த கேமரா

நைட்டி அணிந்திருக்கும் கொள்ளையன்

வீட்டுக்குள் இருந்த ஹார்ட் டிஸ்க்கில் என்ன நடந்தது என பார்த்திருக்கின்றனர். அதில் தலையை முழுவதும் மூடியபடி நைட்டி அணிந்த ஒருவர், துண்டால் தலையை மூடியபடி சட்டையில்லாமல் டவுசர் அணிந்த மற்றொரு நபர் என இரண்டு மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைக்க முயன்றது தெரியவந்திருக்கிறது.

தஞ்சாவூர்: நைட்டி, டவுசர் கொள்ளையர்கள் கூட்டணி அமைத்து திருட முயற்சி! - தப்பிய வீடு, உடைந்த கேமரா

வீட்டுக்குள் இருந்த ஹார்ட் டிஸ்க்கில் என்ன நடந்தது என பார்த்திருக்கின்றனர். அதில் தலையை முழுவதும் மூடியபடி நைட்டி அணிந்த ஒருவர், துண்டால் தலையை மூடியபடி சட்டையில்லாமல் டவுசர் அணிந்த மற்றொரு நபர் என இரண்டு மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைக்க முயன்றது தெரியவந்திருக்கிறது.

Published:Updated:
நைட்டி அணிந்திருக்கும் கொள்ளையன்

தஞ்சாவூர் முழுவதும் கடந்த சில மாதங்களாக அடிக்கடி திருட்டுச் சம்பவங்கள் நடந்துவருகின்றன. குறிப்பாக தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலைப் பகுதியில் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்வதாக அந்தப் பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். `மர்ம நபர்கள் இரவு நேரங்களில் ஆள்நடமாட்டம் இல்லாத இடங்களில் நின்றுகொண்டு வழிப்பறி செய்கின்றனர். வீட்டில் நிறுத்தப்படும் டூ வீலர்கள் காணாமல் போகின்றன. ஆனால், போலீஸ் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை' என்கிறார்கள்.

நைட்டி, டவுசர் அணிந்த திருடர்கள்
நைட்டி, டவுசர் அணிந்த திருடர்கள்

இந்த நிலையில் தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலையிலுள்ள ரியாஸ் நகரில் சின்னத்துரை என்பவர் தன்னுடைய மனைவியுடன் வசித்துவருகிறார். நேற்று இரவு வீட்டின் மாடியில் அவர்கள் தூங்கியிருக்கின்றனர். காலையில் எழுந்துவந்து பார்த்தபோது வீட்டின் முன் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா உடைந்து கீழே கிடந்திருக்கிறது. இதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.

டவுசர் கொள்ளையன்
டவுசர் கொள்ளையன்

பின்னர், வீட்டுக்குள் இருந்த ஹார்ட் டிஸ்க்கில் என்ன நடந்தது என பார்த்திருக்கின்றனர். அதில் தலையை முழுவதும் மூடியபடி நைட்டி அணிந்த ஒருவர், துண்டால் தலையை மூடியபடி சட்டையில்லாமல் டவுசர் அணிந்த மற்றொரு நபர் என இரண்டு மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைக்க முயன்றது தெரியவந்திருக்கிறது.

ஆனால், கொள்ளையர்களால் கதவை உடைக்க முடியவில்லை. மாடிப்பகுதிக்குச் சென்றுவிட்டு கீழே இறங்கிவரும் நபர்கள், கொள்ளையடிக்க முடியாத கோபத்திலும், போலீஸில் சிக்காமல் இருக்கவும் முன் பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமராவை உடைத்து வீசிவிட்டுச் சென்றுள்ளனர். இவை அனைத்தும் ஹார்ட் டிஸ்கில் பதிவாகியிருந்தது. நைட்டி மற்றும் டவுசர் கொள்ளையர்கள் திருடுவதற்காக வந்த தகவல் அந்தப் பகுதியில் பரவி மக்கள் அச்சத்துக்கு ஆளாகினர்.

நைட்டி அணிந்த திருடன்
நைட்டி அணிந்த திருடன்

இது தொடர்பாக சின்னத்துரை தமிழ் பல்கலைக்கழக போலீஸில் புகாரளித்தார். நைட்டி, டவுசர் கொள்ளையர்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நைட்டி கொள்ளையன் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.