Published:Updated:

நீலகிரி: போக்சோவில் முதன்முறை - மாணவியைத் துன்புறுத்தியவருக்கு 44 ஆண்டுகள் சிறை!

ஊட்டி மகளிர் நீதிமன்றம்
ஊட்டி மகளிர் நீதிமன்றம்

பள்ளி மாணவியைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய இளைஞருக்கு 44 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, ஊட்டி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகிலுள்ள வெலிங்டன் அருகிலுள்ள ஒரு பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி (34). திருமணமான இவர் கார்பென்ட்டர் பணி‌ செய்துவந்தார்.

அந்தோணி
அந்தோணி

கடந்த 2017-ம் ஆண்டு, 12-ம் வகுப்பு படித்துவந்த பள்ளி மாணவி ஒருவரை ஏமாற்றி, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிவந்திருக்கிறார். இதில், அந்த மாணவி கர்ப்பமடைந்தார். மாணவியின் கர்ப்பத்தைக் கலைக்க மாத்திரைகள் வாங்கிக் கொடுத்திருக்கிறார் அந்தோணி. அதில் கரு கலைந்திருக்கிறது.

இதையறிந்த மாணவியின் தாயார், குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அந்தோணியைக் கைதுசெய்த போலீஸார் சிறையில் அடைத்தனர்.

ஊட்டி மகளிர் நீதிமன்றம்
ஊட்டி மகளிர் நீதிமன்றம்

இந்த வழக்கு ஊட்டியிலுள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அருணாசலம், குற்றவாளி அந்தோணிக்கு, 44 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.

சென்னை: மாயமான 17 வயது சிறுமி! - போக்சோ சட்டத்தில் கைதான தலைமைக் காவலரின் மகன்

அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாலினி, ``போக்சோ சட்டத்தில் 44 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது இதுவே முதன்முறை. இதுதான் அதிகபட்ச தண்டனை.

வழக்கறிஞர் மாலினி
வழக்கறிஞர் மாலினி

மைனர் பெண்ணின் கருவைச் சேகரித்து, டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தி நிரூபித்தோம். இதனாலேயே உரிய தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு