Published:Updated:

கூடலூர்: பழக்கூடைக்குள் பதுக்கப்பட்ட குட்கா குவியல்! மைசூரிலிருந்து வந்த வாகனத்தை மடக்கிய போலீஸார்

பறிமுதல் செய்யப்பட்ட  குட்கா
பறிமுதல் செய்யப்பட்ட குட்கா

பழக்கூடைகளுக்கு இடையில் அட்டைப் பெட்டிகளுக்குள் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் குவியல் குவியலாகப் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதைக்‌ கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

குட்கா, பான் மசாலா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைத் தடை செய்வதே இயலாத காரியம்போல இருக்கிறது. நீலகிரி மாவட்டத்திலும் குட்கா புழக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருக்கிறது.

குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் மைசூரிலிருந்து சரக்கு வாகனங்களில் பெட்டி பெட்டியாக, சட்டவிரோதமாகக் கொண்டுவரப்படுகின்றன. பெரும்பாலான பெட்டிக்கடைகளில் எந்தத் தட்டுப்படும் இன்றி இவை கிடைக்கின்றன. ஒரு பாக்கெட் ஹான்ஸ் 40 முதல் 70 ரூபாய் வரை விற்கப்படுவதாகத் தொடர் புகார்கள் எழுகின்றன.

பறிமுதல் செய்யப்பட்ட  வாகனம்
பறிமுதல் செய்யப்பட்ட வாகனம்

நீலகிரி மாவட்டம், கூடலூர் சுங்கம் பகுதியில் கூடலூர் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுவந்தனர். கர்நாடக மாநிலம், மைசூரிலிருந்து பழங்களை ஏற்றிக்கொண்டு கூடலூருக்குள் வந்த‌ பிக்கப் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

அந்த வாகனத்தின் ஓட்டுநர் நடராஜனிடம் பேசிப் பார்த்தார்கள். ஓட்டுநர் முன்னுக்குப் பின் முரணான பதிலை அளிக்கவும், சந்தேகமடைந்த காவலர்கள், வாகனத்திலிருந்த லோடைக் கீழே இறக்கி சோதனை செய்தனர்.

குட்கா பொருள்கள்
குட்கா பொருள்கள்

பழக்கூடைகளுக்கு இடையில் அட்டைப் பெட்டிகளுக்குள் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் குவியல் குவியலாகப் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதைக்‌ கண்டு அதிர்ச்சியடைந்தனர். குட்கா பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்து, ஓட்டுநர் நடராஜனையும் போலீஸார் கைதுசெய்தனர்.

பாழடைந்த கட்டடத்தில் குட்கா குடோன்; டூ வீலரில் மது விற்பனை- குலசேகரத்தில் சிக்கிய `போலி நிருபர்'

இது குறித்து கூடலூர் காவல்துறையினர், ``‌மைசூரிலிருந்து பழங்கள் ஏற்றிவந்த கூடலூரைச் சேர்ந்த பிக்கப் வாகனம் ஒன்றைச் சோதனையிட்டோம்.

பறிமுதல் செய்யப்பட்ட  குட்கா
பறிமுதல் செய்யப்பட்ட குட்கா

மறைத்து, கொண்டுவரப்பட்ட குட்கா அட்டைப் பெட்டிகளில் கண்டுபிடிக்கப்பட்டது. பிக்கப் வாகனம் மற்றும் புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தோம். வாகன உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்திருக்கிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு